கதிரை நினைத்து பெருமைப்படும் ராஜியின் அப்பா.. மாமனார் பக்கம் சாயும் செந்தில், பாண்டியனை விட்டுக் கொடுக்காத மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் தான் பாண்டியன் வீட்டிற்கு வந்து குடும்பத்தை இரண்டாகப் பிரித்து பிரச்சினை பண்ணுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இப்போதுதான் தெரிகிறது தங்கமயில் பாவமாகவும், வெறும் டம்மியாகவும் தான் அந்த குடும்பத்தில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் என்பது. ஆனால் அதற்கு பதிலாக தற்போது சுகன்யா வீட்டுக்குள் நுழைந்து பாண்டியன் குடும்பத்தை சின்னா பின்னமாக ஆக்குவதற்கு தயாராகிவிட்டார்.

அந்த வகையில் குமரமேலு மற்றும் சக்திவேலுவிடம் சொன்னபடி வீட்டிற்குள் இருக்கும் அரசியை சுகன்யா கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி குமரவேலுவை காதலிக்க வைக்கும் அளவிற்கு அரசிடம் பேசுகிறார். அரசிக்கும் ஏற்கனவே குமரவேலுவை பிடித்து விட்டதால் சுகன்யா சொல்வதே அப்படியே கண்மூடித்தனமாக நம்பி குடும்பத்தில் இருப்பவர்களை ஏமாற்றும் அளவிற்கு துணிந்து விட்டார். நிச்சயம் அரசி சுகன்யா இருவரும் மூலம் பாண்டியன் குடும்பம் சுக்கு நூறாக உடைய போகிறது.

அடுத்ததாக மீனா வீட்டிற்கு வந்து ஆபீஸ் வேலையே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது செந்தில் மீனாவுக்கு உதவியாக இருக்கிறார். அப்படியே இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது செந்தில், மீனாவின் அப்பாவை பற்றி பெருமையாக பேசி பாண்டியனை திட்டும் அளவிற்கு மீனாவிடம் விட்டுக்கொடுத்து பேசுகிறார். ஆனால் மீனா, நீ என்ன மாமனாரிடம் ஒரு நாள் இரண்டு நாள் பேசியதும் அவர் பக்கம் சாய ஆரம்பித்துவிட்டாய். உங்க அப்பா மீது சின்ன சின்ன வருத்தங்கள் இருந்தாலும் அவர் இல்லை என்றால் நாம் இப்பொழுது இப்படி இருந்திருக்க முடியாது.

அவர் என்ன சொன்னாலும் செய்தாலும் நம்மளுடைய நன்மைக்காகத்தான் இருக்கும் என்று பாண்டியனுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக மீனா, செந்தில் இடம் பேசிவிட்டார். இதனைத் தொடர்ந்து ராஜியை கிரவுண்டுக்கு கூட்டிட்டு போய் ப்ராக்டிஸ் கொடுப்பதற்காக கதிர் ட்ராக் பேண்ட் சர்ட் வாங்கிட்டு வந்து ராஜிடம் கொடுக்கிறார். ராஜி அதை போடுவதற்கு தயங்கிய நிலையில் கதிர் சமாதானப்படுத்தி போட வைத்து இரண்டு பேரும் கிளம்பி விட்டார்கள்.

ஆனாலும் இந்த ட்ரெஸ்ஸை போடுவது குடும்பத்தில் இருப்பவர்கள் பார்த்தால் நிச்சயம் எதாவது ஒரு பிரச்சினையாகும் என்று ராஜி சொல்கிறார். கதிர் அதெல்லாம் ஆகாது என்று சொல்லி ராஜ்ஜியை வீட்டிலிருந்து கூட்டிட்டு போகும் பொழுது பாண்டியன் மற்றும் கோமதி பார்த்து விடுகிறார்கள். ஆனாலும் கதிர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ராஜியை கூட்டிட்டு போய்விடுகிறார். இவர்களை பார்த்ததும் பாண்டியன் கடுப்பாகி கோமதியிடம் கோபப்படுகிறார்.

அடுத்ததாக ராஜியை கிரவுண்டுக்கு கூட்டிட்டு போன கதிர் ப்ராக்டிஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அந்த வழியாக வந்த ராஜியின் அப்பா இவர்களை பார்த்து கொஞ்சம் பெருமைப்படும் அளவிற்கு பக்கத்தில் இருப்பவர் சொன்னதால் அவருடைய மனதில் சின்ன மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில் நகையையும் கதிர் திருடவில்லை என்பது முத்துவேலுக்கு தெரிந்துவிட்டது. அப்படியே கதிர் மீது எந்த தவறும் இல்லை ராஜி வாழ்க்கையை காப்பாற்றுவதற்கு கோமதி மற்றும் கதிர் எடுத்த முடிவுதான் இந்த கல்யாணம் என்று தெரிந்து விட்டால் நிச்சயம் முத்துவேலு, பாண்டியன் குடும்பத்தை ஏற்றுக் கொள்வார்.

Leave a Comment