புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

100 நாட்கள் ஓடிய ராஜ்கிரண் படங்கள்.. ரஜினி, கமல் இருக்கும்போதே மாஸ் பண்ணியவர்

100 நாட்களுக்கு மேல் ஓடிய ராஜ்கிரண் படங்கள்

என் ராசாவின் மனசிலே

en-rasavin-manasuley
en-rasavin-manasuley

கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படம் என் ராசாவுக்கு தங்க மனசு. இப்படத்தில் மீனா, ஸ்ரீவித்யா, கவுண்டமணி, செந்தில் மற்றும் வடிவேலு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ‘பெண் மனசு ஆழம் என்று’ எனும் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியைப் பெற்றன. ராஜ்கிரண்  திரைப்பட வாழ்க்கையில் இப்படம் வெற்றி பெற்று நடிகராக நல்ல பெயரை பெற்று தந்தது.

எல்லாமே என் ராசாதான்

ellamey-en-rasathan
ellamey-en-rasathan

ராஜ்கிரண் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியான திரைப்படம் எல்லாமே என் ராசாதான். இப்படத்தில் சங்கீதா, ரூபஸ்ரீ மற்றும் வடிவேலு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் பாடல் ‘ஒரு சந்தனக்காட்டுகுள்லே’ நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல் அனைத்தும் மாபெரும் வெற்றியை பெற்றன. இப்படம் ராஜ்கிரண்க்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது. வடிவேலுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம்.

நந்தா

பாலா இயக்கத்தில் சூர்யா, ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படம் நந்தா. இப்படத்தில் லைலா மற்றும் சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகும். பாலாவின் திறமையால இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. சிவாஜி நடிக்க இருந்த கேரக்டரில் ராஜ்கிரண் நடித்து பெரும் பெயர் பெற்றார்.

பாண்டவர் பூமி

pandavar-boomi
pandavar-boomi

சேரன் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படம் பாண்டவர் பூமி. இப்படத்தில் ஷமிதா, அருண் விஜய் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். அழகான குடும்ப படமாக தேர்ந்தெடுத்து ராஜ்கிரண் நடித்திருப்பார்.

சண்டகோழி

sanda-kozhi
sanda-kozhi

லிங்குசாமி இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படம் சண்டக்கோழி. இப்படத்தில் மீரா ஜாஸ்மின், கஞ்சா கருப்பு, விஷால் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் ‘தாவணி போட்ட தீபாவளி’  நல்ல வரவேற்பை பெற்றது. விஷால் திரைத்துறை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகும். இப்படத்தில் ராஜ்கிரணுக்கு நல்ல மாஸ் கேரக்டர் தேர்வு செய்து நடித்திருப்பார்.

தவமாய் தவமிருந்து

thavamai-thavamirunthu
thavamai-thavamirunthu

சேரன் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படம் தவமாய் தவமிருந்து. இப்படத்தில் பத்மப்ரியா, சரண்யா பொன்வண்ணன்  மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்குSabesh-Murali இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன. இப்படம் பல விருதுகளை வாங்கி உள்ளது. இப்படம் ராஜ்குமாரின் திரைப்பட வாழ்க்கையில் மிக முக்கியமாக  படம்.

பவர் பாண்டி

Power Paandi-Official Trailer

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான படம் பவர் பாண்டி. இப்படத்தில் பிரசன்னா, ரேவதி, சாயா சிங் மற்றும் மடோனா செபஸ்டியன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தனுஷ் நண்பர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன. தனுஷ் இயக்கிய முதல் படமாகும். ராஜ்கிரண் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ராஜ்கிரண் அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கிய படம்.

Trending News