என்ன பெத்த ராசா படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ராஜ்கிரண். இதைத்தொடர்ந்து அரண்மனைக்கிளி, வேங்கை, முனி, கிரீடம், சண்டக்கோழி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார்.
ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் போன்ற நடிகர்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இணையாக உச்சத்தில் இருந்த ஒரே நடிகர் ராஜ்கிரன் மட்டுமே. ரஜினி – கமல், விஜயகாந்த் – ராமராஜன் ஆகியோரின் படங்களுக்கு இணையாக ராஜ்கிரணின் படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். தொடை தெரியும்படி வேட்டியை மடித்துக் கட்டி கம்பீரமாக நடந்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
அந்த சமயத்தில் ரஜினி, கமலுக்கு சவால்விடும் அளவிற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய ஒரே நடிகராக திகழ்ந்த புகழ் ராஜ்கிரணை மட்டுமே சேரும். மாணிக்கம் என்ற படத்தில் தான் இவருக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம். இந்த தகவலை சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
மேலும், “சினிமாவில் பஞ்சம் பிழைக்க வந்தவன் தான் நான். என்று அதன் பிறகு தான் தமிழில் 25 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்தேன்” என்றும் கூறியுள்ளார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து இன்று வரை ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகர் ராஜ் கிரண்.
தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் வடிவேலுவை முதன் முதலாக சினிமாவில் அறிமுகப்படுத்தியது ராஜ்கிரண் என்பது கூடுதல் தகவல்.