புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அமரன் பட இயக்குனரின் அடுத்த ஹீரோ.. கதை கேட்ட உடனே துண்டு போட்டாராம்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அமரன் படம் வசூல் வேட்டை நடத்தியது. இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் ஆகச்சிறந்த படமாகவே உள்ளது.

இந்த நிலையில், அடுத்தது இவர் யாரை வைத்து படம் எடுப்பார் என்று எல்லாரும் யோசித்து கொண்டு இருந்த நேரத்தில், தனுஷ் இவரை சந்தித்து, படம் பண்ணலாம் என்று கூறினார்.

தனுஷுடன் கூட்டணி உறுதியான நிலையில், சமீபத்தில் வேறு ஒரு தகவலும் வெளியானது. அப்படி, ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக, பாலிவுட்-க்கு செல்கிறார் என்று கூறப்பட்டது. அங்கு ஒரு படம் பண்ண போகிறார் என்ற செய்தி வெளியான போது, என்ன எல்லோரும் ஹிந்தி-க்கே செல்கிறார் என்ற எண்ணம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

அமரன் பட இயக்குனரின் அடுத்த ஹீரோ..

அதுமட்டுமின்றி, T-series தயாரிப்பு நிறுவனம் என்று செய்தி வெளிவந்த போது, கண்டிப்பாக பெரிய பட்ஜெட் படமாக தான் இருக்கும் என்று தான் அனைவரும் எண்ணினார்கள்.

ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தகவல் படி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக தனுஷ் வைத்து ஒரு படம் பண்ணிவிட்டு தான் பாலிவுட்-க்கு செல்கிறாராம்.

இது தொடர்பாக ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது, “சிவகார்த்திகேயனை வைத்து போற்றப்பட்ட ஒரு ராணுவ வீரரின் கதையை படமாக்கினேன். அடுத்ததாக, தனுஷை வைத்து (unsung heroes) பொதுமக்களுக்கு தெரியாமல் போன, போற்ற தவறவிட்டவர்கள் பற்றிய கதையை எடுக்க போகிறேன் என்று கூறி இருக்கிறார்.”

இதை தொடர்ந்து ரசிகர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றியா இல்லை, நம் சமூகத்தில் போற்றப்படாமல் தவிப்பவர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர் இயக்கத்தின் மீது முழு நம்பிக்கை தனுஷ் வைத்திருக்கிறார் என்றால், நிச்சயமா இவரிடம் ஒரு Magic இருக்க வேண்டும்

Trending News