வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆண்டவர் செய்த சிறப்பான தரமான சம்பவம்.. பிக்பாஸில் கெத்து காட்டும் ராஜு!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்5 தொடங்கி வெற்றிகரமாக 6 வாரத்தை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ராஜூ ஒரு தனித்தன்மை இல்லாதவர், அவர் முகத்திற்கு நேராக கருத்துக்களை கூறவில்லை என மற்ற போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது நியாயமா? என கமல் அனைவரிடமும் நேற்றைய நிகழ்ச்சியில் கருத்துக்களை கேட்டார்.

அப்பொழுது தாமரை இடமும் அவருடைய கருத்தை கேட்டார். அதற்கு தாமரை, ராஜு என்னை தனித்தன்மை இல்லாதவர் என்று சொன்னது என்னால் ஏத்துக்க முடியல. அதனால தான் ராஜுவை நான் சொன்னேன் என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். உடனே கமல் சார் பட்டுனு ,அப்போ நீங்க ராஜுவை பழிவாங்கும் விதமாக தான் அவர் பெயரை சொல்லி இருக்கீங்கன்னு தாமரையின் முகத்திரையைக் கிழித்தார்.

மேலும் தாமரை மீது அதிக அக்கறையும் மதிப்பும் வைத்து அவருக்கு இந்தப் போட்டியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எப்படி விளையாட வேண்டும் என்றெல்லாம் சொல்லிய ராஜூவுக்கு நல்ல பதிலடியாக தாமரை முதுகில் குத்தி விட்டார்.

இதனை நன்கு அறிந்திருந்தார் ராஜு, அதனால் தான் தாமரை ராஜூ மீது தண்ணீரை ஊற்றி தண்டனை தரும்பொழுது இதுக்கு நீ என்ன செருப்பால அடிச்சுடு என்று தாமரையைப் பார்த்து தன் மனக்குமுறலை கொட்டினார். இவ்வாறு கமல் சார், ராஜுவை தனித்தன்மை இல்லாதவர் என கூறிய போட்டியாளர்கள் அனைவரையும் கேள்வி வலையில் சிக்கவைத்து வறுத்தெடுததார்.

மேலும் கமல் அவர்களை நோஸ்கட் பண்ணும் விதமாக உங்களின் கருத்து இப்படி இருக்க வெளியே பார்க்கும் மக்களின் கருத்து வேறு மாதிரி இருக்கு என்று கூறி, ராஜு மக்களால் காப்பாற்றபடுகிறார் என்னும் மகிழ்ச்சியான செய்தியை கூறினார்.

இதைக்கேட்டு ராஜுவை விரும்பாத போட்டியாளர்கள் அனைவரும் செம ஷாக் ஆனார்கள். அதன் பிறகு ராஜு சரியாகத்தான் பிக்பாஸ் விளையாட்டை விளையாடி கொண்டிருக்கிறார் என்று பிக் பாஸ் வீட்டில் செம கெத்தா சுற்ற ஆரம்பித்து விட்டார்.

Trending News