வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட ராஜு.. செம்ம கேரக்டர் ஆச்சே!

பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜு தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறார். எனவே இவருடைய பேட்டி ஒன்றில் ராஜு தளபதி விஜயின் தீவிர ரசிகர் என்றும் அவருடன் நண்பன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், அதற்காக ஆடிஷனில் தேர்வாகி படத்தில் நடிக்க தயாரான பிறகு ராஜுவின் முட்டைக் கண்ணா பறிபோனதாம்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் தளபதி விஜயின் நண்பன். இந்தப்படத்தில் மில்லி மீட்டர் சென்டி மீட்டர் ஆக மாறும் கதாபாத்திரத்தில் ராஜு நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஆனால் படக் குழுவில் ஒருவர் மில்லி மீட்டர் சென்டி மீட்டராகும் போது ஆளுதான் வளர்ந்திருக்க வேண்டும் கண்ணு வளரக்கூடாது என்று ராஜுவின் முட்டைக் கண்ணால் அந்த வாய்ப்பு கைநழுவி விட்டதாம்.

அதன் பிறகு பலமுறை தளபதி விஜய்யுடன் மேடையில் நிற்கும் வாய்ப்பு கிடைத்தும் அவரை நேரில் சந்தித்து ராஜு பார்க்கவில்லையாம். ஏனென்றால் பல கோடி ரசிகர்கள் தளபதி விஜய்க்கு கை கொடுப்பார்கள். அவருக்கு நம்மை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஏதாவது ஒன்று சாதித்த பின்புதான் தளபதி விஜயின் முன்பு நிற்க வேண்டும் என்று தூரத்திலிருந்தே தளபதி விஜய்யை கண்டு ரசித்து கொள்வாராம்.

இவ்வாறு சினிமாவில் பாக்யராஜின் சிஷ்யனாக இருக்கும் ராஜு, தளபதி ரசிகர்களுடன் மட்டுமே பள்ளிப் பருவம் முதல் கல்லூரி பருவம் வரை நண்பர்களாக ஆக்கி கொள்வாராம். அந்த அளவிற்கு தளபதி விஜய்யின் மீது தீவிர ரசிகராக இருந்த ராஜாவிற்கு நண்பன் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டதற்கு இன்றுவரை வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாராம்.

இருப்பினும் கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்ன தெரியுமா என்ற படத்தில் லீடு ரோலில் ராஜு நடித்திருந்தாலும், சினிமாவில் போதிய வரவேற்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் திசைமாறிய ராஜு விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதிகண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியலில் நடித்து பிரபலமாகி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார்.

எனவே அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிந்த நிலையில், இனி வரும் நாட்களில் ராஜு நடிப்பில் வரிசையாக படம் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending News