செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

குழாயடி சண்டையாக மாறிய லாஸ்லியா, கவின் காதல்.. ராஜு பாய் கூறிய பகீர் தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு காதல் டிராக் கண்டிப்பாக இடம்பெறும். அவ்வாறு பிக் பாஸ் சீசன் 3 இல் மலர்ந்த காதல் தான் லாஸ்லியா, கவின் இருவரின் காதல். விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் நடித்தவர் கவின்.

லாஸ்லியா இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர்கள் காதலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு, எதிர்ப்பு இரண்டுமே இருந்து வந்தது. மேலும் பிக்பாஸ் முடிந்த பிறகும் இவர்களது காதலை தொடர்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் நேரெதிராக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். லாஸ்லியா, கவின் இருவருமே தங்களது படங்களில் தற்போது படு பிசியாக உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் லாஸ்லியா நடிப்பில் கூகுள் குட்டப்பா என்ற படம் வெளியாகி உள்ளது. இதற்காக பல ஊடகங்களுக்கு லாஸ்லியா பேட்டி கொடுத்து வந்தார்.

அப்போது கவின் உடனான காதலுக்கு பதிலளித்த லாஸ்லியா, பிக் பாஸ் வீட்டில் மிகவும் மன உளைச்சலாக இருக்கும், அப்போது கவினும், நானும் காதலித்தது உண்மைதான். ஆனால் வெளியில் வந்த பிறகு எங்களுக்குள் செட்டாகவில்லை, அதனால் பிரிந்து விட்டோம் என லாஸ்லியா அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தற்போது பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு இவர்களது காதல் கதையை பற்றி பேசியுள்ளார். அதாவது லாஸ்லியா, கவின் இன் சண்டை முற்றிப் போய் கைகலப்பு வரை முடிந்ததாகக் கூறியுள்ளார். அதாவது பிக்பாஸ் முடிந்த பிறகு லாஸ்லியா, கவினை பார்த்து எங்க அப்பா கண்ணீருக்கு முன்னாடி நீ தூசுடா என கூறியுள்ளார்.

அதேபோல் கவினும் உன்னால எங்க அம்மா என வீட்டுக்குள்ளேயே விட மாட்றாங்க, என் பிரண்டு எனக்கு கொடுத்த அறைய நான் உனக்கு கொடுத்து இருக்கணும் என இருவரின் பேச்சும் முற்றிப்போய் குழாயடி சண்டை ஆக மாறியுள்ளது. இதனால்தான் இவர்கள் இருவரும் பிரிந்தார்கள் என ராஜு கூறியுள்ளார்.

Trending News