சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பிக் பாஸ்க்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டான ரக்ஷிதா.. விஜயசாந்திக்கு டஃப் கொடுக்கும் கெட்டப்

இப்போது கருப்பு நிறத்தில் கதாநாயகிகள் சீரியலில் அதிகம் எடுத்தாலும் ஆரம்பத்தில் இந்த ட்ரெண்டை உருவாக்கியது ரக்ஷிதா தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த தொடரில் அவருடன் நடித்த தினேஷ் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ரக்ஷிதாவுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த சீரியல் தான் சரவணன் மீனாட்சி. நடிகர் கவினுக்கு ஜோடியாக இந்த தொடரில் ரக்ஷிதா நடித்து புகழ் பெற்றார். இதை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியிலேயே நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மெர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Also Read : அதை செஞ்சிட்டா நான் சோலிமுடிஞ்சேன்.. ரக்ஷிதா கணவனை பிரிய பயில்வான் கூறிய காரணம்

மேலும் இந்த தொடரில் இருந்து விலகி ஜீ தமிழ் தொடருக்கு ரக்ஷிதா சென்றுவிட்டார். கடைசியாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு ரக்ஷிதாவுக்கு கிடைத்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக் கொள்ள ரக்ஷிதா தவறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ராபர்ட் மாஸ்டர் தன்னிடம் எல்லை மீறி பழகுவதை அறிந்தும் மௌனமாக இருந்து வந்தார்.

இதனால் ரசிகர்கள் அந்த இடத்தில் ரக்ஷிதா குரல் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறி வந்தனர். இதைத் தொடர்ந்து ஏற்கனவே ரக்ஷிதா தனது கணவரை விட்டு பிரிந்த நிலையில் சமீபத்தில் போலீஸ் புகார் கொடுத்து சர்ச்சையை கிளப்பி இருந்தார். விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற தொடரில் தினேஷ் இப்போது நடித்து வருகிறார்.

Also Read : வெறும் பனியனில் சைடு போஸ் கொடுத்த சரவணன் மீனாட்சி ரக்ஷிதா.. ஏங்க வைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்

இந்நிலையில் பிக் பாஸ்க்கு பிறகு ரக்ஷிதாவும் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். அந்த சீரியலில் போலீஸ் கெட்டப்பில் ரக்ஷிதா வர இருக்கிறார். பொதுவாக சினிமாவை பொறுத்த வரையில் போலீஸ் கெட்டப் என்றால் விஜயசாந்தி தான் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது விஜய சாந்திக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு ரக்ஷிதா இருக்கிறார்.

rakshitha
rakshitha

மேலும் இந்த சீரியலின் மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. சரவணன் மீனாட்சி தொடர் போல ரக்ஷிதாவுக்கு இந்த சீரியலும் நல்ல பெயரை வாங்கி தரும் என ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். ஆனால் மற்றொருபுறம் கேமியா தோற்றத்தில் தான் ரக்ஷிதா நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Also Read : 2வது திருமணத்திற்கு தயாரான ரக்ஷிதா.. வளைத்துப் போட்ட பிரபல இயக்குனர்

Trending News