வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரக்ஷிதாவிடம் எல்லை மீறும் போட்டியாளர்.. கைகள் வெட்டப்படும், இருந்தாலும் மௌனம் காப்பது ஏன்?

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி கிட்டதட்ட மூன்று வாரங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் தெரிந்த முகங்கள் அதிகம் உள்ளனர். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து நிறைய பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா இந்த விளையாட்டை திறம்பட விளையாடி வருகிறார். இந்த தொடரில் நடிக்கும் போது ரக்ஷிதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

Also Read : பாத்ரூமில் கதறி அழுத தனலட்சுமி.. வச்சி செஞ்சு விட்டா ஆண்டவர்

ஆனால் டான்ஸ் மாஸ்டராக பிக் பாஸ் வீட்டில் நுழைந்த ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து ரக்ஷிதாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். ஏற்கனவே திருமணமகி சில கருத்து வேறுபாடு காரணமாக தற்காலிகமாக கணவரை பிரிந்து வாழும் ரக்ஷிதாவை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார்.

ரக்ஷிதாவுக்கு திருமணம் ஆனதை குறிப்பிடும் வகையில் நெற்றி பொட்டில் குங்குமம் வைத்தும் ஜாடை மாடையாக கூறினார். அப்போதும் ராபர்ட் மாஸ்டர் விடாமல் துரத்தியதால் அவரை அண்ணன் என்று கூப்பிட்டார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதா என்னுடைய க்ரஷ் தான் என அடம்பிடிக்கிறார்.

Also Read : ஜவ்வுமுட்டாய்க்கே டஃப் கொடுத்த பாரதி கண்ணம்மா.. கதை இல்லேன்னா இப்படியா உருட்டுவீங்க

இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் ஒரு படி கீழ்த்தரமாக சென்று ரக்ஷிதாவை கட்டி அணைக்க நெருங்கினார். அதை பார்த்த ரக்ஷிதா கைகள் வெட்டப்படும் என்று கூறினாரே தவிர தனது கோபத்தை காட்டவில்லை. எதுக்காக இருந்தாலும் முகத்துக்கு நேராக பளிச்சென்று பேசும் ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டர் விஷயத்தில் மௌனம் காத்து வருகிறார்.

ஒருவேளை அவருடைய நட்பு போய்விடும் என்பதற்காகவா அல்லது கோபமாக நடந்து கொண்டால் மக்கள் என நினைப்பார்கள் என்று யோசித்து வருகிறாரோ என்பது தெரியவில்லை. ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது. ஆகையால் கண்டிப்பாக எரிமலையாக ரக்ஷிதா ஒரு நாள் வெடிக்க உள்ளார்.

Also Read : சுடச்சுட ரெடியான இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.. இந்த 5 பேரில் வெளியேறப் போகும் அடுத்த நபர்

Trending News