திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சுயபுத்தி இல்லாமல் புகார் கொடுத்த ரட்சிதா.. கிடுக்கு பிடி போட்டு உண்மையை வர வைத்த போலீஸ்

Actress Ratchitha: சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ரட்சிதா மகாலட்சுமிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான இவர் அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதிலிருந்து இவர் குறித்து ஏதாவது ஒரு சர்ச்சையான செய்தி வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது.

அதிலும் இவர் தன் கணவரை பிரிந்து இருப்பது பல விமர்சனங்களுக்கு ஆளாகியது. அந்த வகையில் சமீபத்தில் இவர் தன்னுடைய கணவர் தினேஷ் தன்னை மிரட்டுவதாகவும் மோசமாக மெசேஜ் அனுப்புவதாகவும் போலீசில் புகார் அளித்திருந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து தினேஷ் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

Also read: எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய பிரபலம்.. குடும்ப பஞ்சாயத்தை சந்தி சிரிக்க வைத்த ரட்சிதா

அதில் அவர் தன் மனைவியுடன் வாழ விரும்புவதாகவும் இது போன்ற வேலையை நான் செய்யவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த பதிலை கேட்ட போலீசார் அவருடைய போனையும் ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள்.

அவர் அனுப்பிய மெசேஜில் எந்த தவறான நோக்கமும் இல்லாததை தொடர்ந்து ரட்சிதா மேல் அவர்களுக்கு சந்தேகம் வலுப்பெற்று இருக்கிறது. அதன் காரணமாக அவருடைய போனையும் வாங்கி பார்த்ததில் உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அதாவது ரட்சிதா வேண்டுமென்றே இப்படி ஒரு பொய் புகாரை கொடுத்திருக்கிறார்.

Also read: அர்த்த ராத்திரியில் ரட்சிதா கணவன் செய்த மட்டமான வேலை.. போலீஸிடம் அளித்த பரபரப்பான புகார்

இதனால் கடுப்பான போலீசார் அவரிடம் கிடுக்கு பிடி போட்டு விசாரணை செய்து இருக்கிறார்கள். அதில் பயந்து போன ரட்சிதா, சீக்கிரம் விவாகரத்து பெறுவதற்காக வழக்கறிஞர் சொல்லிக் கொடுத்ததை நான் கூறினேன் என்ற உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

அதன் பிறகு போலீசார் இது போல் இனிமேல் போய் புகார் கொடுத்தால் அவ்வளவுதான் என்று அவரை எச்சரித்து மிரட்டி அனுப்பி இருக்கின்றனர். இவ்வாறாக சுயபுத்தி இல்லாமல் தன் கணவர் தன்னை அசிங்கமாக பேசுகிறார் என்று பொய் கூறி அதிர்வலையை ஏற்படுத்திய ரட்சிதாவின் குட்டு வெளிப்பட்டிருக்கிறது.

Also read: பிக் பாஸில் வந்த பிறகு சீரியல் வாய்ப்பும் பறிபோனதா? உண்மையை உடைத்த ரட்சிதா

Trending News