வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எதிரிக்கு எதிரி நண்பன்.. தினேஷை வெறுப்பேற்ற ரட்சிதா போட்ட பதிவு, பிக்பாஸில் ஆதரவு இவருக்கு தான்

Biggboss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் பற்றிய பேச்சு தான் இப்போது அதிகமாக இருக்கிறது. இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக இருப்பவர்தான் தினேஷ். சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கும் இவருக்கு பிக்பாஸ் வேறொரு அடையாளமாக மாறி இருக்கிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தன் மனைவி ரட்சிதாவுடன் மீண்டும் சேர வேண்டும் என்ற கணக்கையும் தினேஷ் போட்டுள்ளார். ஆனால் ரட்சிதா உங்க ராஜதந்திரம் என்கிட்ட செல்லாது என்று சொல்லும் படியாக தற்போது ஒரு பதிவை போட்டுள்ளார்.

இதை பார்க்கும் போது அவர் தினேஷை வெறுப்பேற்றி இருப்பது நன்றாக தெரிகிறது. அதாவது பிக்பாஸ் வீட்டில் தினேஷ் மற்றும் விசித்ரா இருவரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது என இவர்களின் சண்டை அப்பட்டமாக தெரிகிறது.

Also read: கமலுக்கு ஒரு குத்து, மாயாவுக்கு ஒரு குத்து.. யாரு சாமி இவரு.? பொளந்து கட்டும் டைட்டில் வின்னர் அப்பா

அதில் சிலர் விசித்ராவுக்கும் சிலர் தினேஷுக்கும் ஆதரவாக இருந்து வருகின்றனர். அதே போல் ரட்சிதாவும் இப்போது தன்னுடைய ஆதரவை விசித்ராவுக்கு தெரிவித்துள்ளார். இது நிச்சயம் யாரும் எதிர்பாராதது தான். என்னதான் கணவர் மீது மனஸ்தாபம் இருந்தாலும் அவர் அதை வெளிப்படையாக காட்ட மாட்டார் என ரசிகர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால் அவர் இப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விசித்ராவின் போட்டோவை போட்டு ஃபைட்டர்(fighter) என்று தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் தான் கெத்து என்று ஒரு சல்யூட்டையும் போட்டுள்ளார். இதுதான் இப்போது அதிக கவனம் பெற்றுள்ளது.

தினேஷை வெறுப்பேற்ற ரட்சிதா போட்ட பதிவு

ratchitha
ratchitha

மேலும் இதன் மூலம் ரட்சிதா இனி நாங்கள் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். ஏற்கனவே இவர்களுடைய குடும்பப் பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றது. இருந்தாலும் தினேஷ் மீண்டும் சேர்த்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் ரட்சிதா எதிரிக்கு எதிரி நண்பன் என விசித்ராவுக்கு சப்போர்ட் செய்திருக்கிறார்.

Also read: அடிச்சும் திருந்தாத புள்ளைய ஆப்பு வச்சு திருத்திட்டீங்க.. ஹவுஸ் மேட்ஸை ஓரங்கட்டி ஸ்கோர் செய்த நிக்சனின் ரத்த உறவு

Trending News