வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

போதைப்பொருளும்.. ரகுல் ப்ரீத் சிங் கதையும்!

கடந்த வருடம் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி என்றால் அது நடிகர்கள் மற்றும் நடிகைகள் சிலர் போதைப் பொருள் விவகாரத்தில் மாட்டியதுதான். இதில் சிலர் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் வசமாக சிக்கினார்.

சினிமா என்றாலே போதையான உலகம் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நடிகர்கள் முதல் நடிகைகள் வரை அனைவருமே இரவு பார்ட்டிகளில் போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்தனர்.

south-indian-celebrities-party-photos
south-indian-celebrities-party-photos

இதில் தமிழ் சினிமாவில் நடித்த சில நடிகைகளும் சிக்கினார். அதில் மிக முக்கியமாக பாதிக்கப்பட்டது நடிகை ரகுல் பிரீத் சிங். ரகுல் பிரீத் சிங் அரைகுறை ஆடையில் அப்பப்ப புகைப்படங்களை வெளியிடுவார். இவருக்கும் போதைப்பொருள் விவகாரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என விசாரணைக்கு அழைத்தனர்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இவர் ஒரு மோசமான பெண் தோன்றவே தோன்ற ஆரம்பித்தார். அந்த வழக்கு முடியும் வரை ரசிகர்கள் அனைவரும் இவரை அந்த கோணத்தில் பார்த்தது ரகுல் பிரீத் சிங்கை மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டது.

rakul-preet-singh-case-cinemapettai
rakul-preet-singh-case-cinemapettai

மேலும் பார்க்கும் இடமெல்லாம் போதைக்காரி, மோசக்காரி என்பது போலவே ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டதால், மீண்டும் எப்படி அவர்கள் முகத்தில் முழிக்க போகிறோம் என்ற அச்சத்தில் தவித்து வந்ததாகவும், அதன் பிறகு தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்ற செய்தி வெளிவந்த பிறகுதான் கொஞ்சம் மன நிம்மதி கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மன உளைச்சலில் இருந்து வெளிவர குடும்பத்துடன் ரகுல் பிரீத் சிங் மாலத்தீவுக்கு படை எடுத்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

rakul-preet-singh-sushanth-singh-cinemapettai
rakul-preet-singh-sushanth-singh-cinemapettai

ஒருமுறை சுஷாந்த் காதலி ரியா சக்ரவர்த்தி சேர்த்து பல முன்னணி நடிகைகள் கைது செய்தது போலீஸ். மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் விசாரணையில் ரகுல் பெயரை சொல்லி அதிர வைத்து மாட்ட வைத்தார். மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்ற இளம் நடிகர் தற்கொலைக்கும் ரகுல் ப்ரீத் சிங் உடந்தையாக இருந்ததாகவும் தகவல் வந்தது.

Trending News