ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

இயக்குனர் சங்கரால் பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகர்.. இப்படி ஒரு செக் வைப்பாங்கன்னு எதிர்பாக்கல.!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஷங்கர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணின் 15 வது படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக கமல் நடிப்பில் உருவாக இருந்த இந்தியன் 2 படத்தை இயக்கும் முயற்சியில் சங்கர் ஈடுபட்டிருந்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் தொடர் சர்ச்சை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிச் சென்றது.

இதற்கிடையில் தனது புதிய படத்தை இயக்கும் முயற்சியில் சங்கர் இறங்கினார். ஆனால் இந்த முறை தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம்சரணை ஹீரோவாக வைத்து படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தற்காலிகமாக “RC-15” என அழைத்து வருகின்றனர்.

கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் இயக்கத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற எண்ணத்தில் ராம்சரண் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இப்படத்தில் நடிக்க ஷங்கர் சில நிபந்தனைகளை விதித்துள்ளாராம்.

அதாவது சங்கர் மற்றும் ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்காக ராம் சரணிடம் அதிக நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை வேறு எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகக் கூடாது எனவும் சங்கர் கூறியுள்ளாராம்.

ramcharan-shankar
ramcharan-shankar

நிச்சயம் இப்படம் மூலம் ஒரு நிலையான இடத்தை பிடித்து விடலாம் என நினைத்த ராம் சரண் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஓகே என கூறியுள்ளார். இதனால் தெலுங்கில் அவருக்கு கிடைத்தது ஒரு பட வாய்ப்பை தள்ளி வைத்துள்ளார். ராம் சரணின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் ராம் சரணை நீக்கி விட்டு வேறு நடிகரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்து விட்டாராம்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்துள்ள ராம் சரண், இயக்குனர் சங்கரை நம்பி வந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டோமே என புலம்பி வருகிறாராம். சங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் வெற்றி பெற்றால் மட்டுமே ராம் சரண் இழந்த மார்க்கெட்டை திரும்ப பிடிக்க முடியும்.

Trending News