புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அஜித் விஜய்யை பின்னுக்கு தள்ளிய ராம்சரண்.. ஷங்கர் பட சம்பளம் இத்தனை கோடிகளா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி பிரம்மிப்பை ஏற்படுத்தியது. இப்படம் 300 கோடியில் இருந்து 450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது.

பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆர் ஆர் ஆர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரடலா சிவா இயக்கத்தில் ராம் சரண் தன் தந்தை சிரஞ்சீவியுடன் சேர்ந்து ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தபடம் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் ராம்சரண் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். ஜெயராம், அஞ்சலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு புனேயில் நடந்தது.

இந்நிலையில், இப்படத்தில் ராம்சரண் வாங்கிய சம்பளம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு நடிகர்களின் மார்க்கெட் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகிறது. தற்போது இந்திய அளவில் பான் இந்தியா படங்களாக வெளியிடப்படுகின்றன. இதனால் தெலுங்கு நடிகர்கள் பலரும் தங்களது சம்பளத்தை தொடர்ந்து உயர்த்திய வண்ணம் உள்ளனர்.

அந்தவகையில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ராம் சரண் 100 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தெலுங்கு சினிமாவில் பிரபாஸுக்கு அடுத்ததாக அதிக சம்பளம் பெறும் நடிகராக ராம்சரண் உயர்ந்துள்ளார்.

Trending News