கடந்த சில மாதங்களாகவே ஷங்கர் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக கமல் ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் 2 பட பிரச்சனை அவரை பாடாய்படுத்தி வருகிறது.
இதனால் அடுத்தடுத்து அவர் இயக்கும் படங்களுக்கு பெரிய தடை எழுந்துள்ளது. அடுத்ததாக சங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணுடன் ஒரு படமும், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் ராம் சரண் நடிக்கும் படம் விஜய்க்காக எழுதிய கதை என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே ஷங்கர் மற்றும் விஜய் இணைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பது போன்று கூறி வந்தனர்.
இதற்காக ஷங்கர் ஏற்கனவே கதை எழுதி வைத்துவிட்டார். ஆனால் அந்த கதையில்தான் இப்போது ராம்சரண் நடிக்கவுள்ளார். விஜய்க்கு எழுதிய கதை ராம் சரணுக்கு எப்படி சென்றது என்பது குறித்து விசாரிக்கையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போது விஜய்யின் சம்பளம் மட்டுமே 100 கோடி. அதேபோல் சங்கருக்கு 40 முதல் 50 கோடி சம்பளம். இதுவே 150 கோடியை தொட்டு விட்டதால் ஷங்கரின் பட செலவு மேலும் ஒரு நூறு கோடிக்கு மேல் வரும். அவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்க தமிழ் தயாரிப்பாளர்கள் யாரும் ரெடியாக இல்லை. அதுமட்டுமில்லாமல் சங்கர் குறித்த நேரத்தில் படத்தை முடிக்க மாட்டார் என்ற அச்சம் தயாரிப்பாளர்களிடம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.
மேலும் விஜய்யும் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் நடித்தால் பின்னால் சிக்கல் வரலாம் என யோசித்தாராம். இதனாலேயே தற்போது அந்த படத்தை தெலுங்கில் டாப் தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் கூறி அந்த படத்தில் ராம் சரணை கொண்டு வந்துள்ளார் ஷங்கர். விஜய்க்கு எழுதிய கதையில் ராம்சரண் எப்படி பொருந்துவார்? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.