தெலுங்கு, ஹிந்தியில் ஏராளமான படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. 1993 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளியான திருடா திருடா படத்திற்கு இவர்தான் வசனம் எழுதியிருந்தார். இவர் எப்போது டுவீட் செய்தாலும் அது சர்ச்சையில் சென்றுதான் முடியும்.
இவர் சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் பிரபல ஆபாசப் பட நடிகை மியா மல்கோவாவை வைத்து GOD and TRUTH என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் ஏராளமான நிர்வாண காட்சிகள் இருக்கவே இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
சமீபத்தில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண் நீச்சல் உடையில் இருக்கும் படத்தை பதிவிட்டிருந்தார். அதில் அவர், இந்தப்படத்தில் நீல நிற உடையில் இருப்பவர் பெயர் சத்யா. இவர் எனது முதல் காதலி. நான் சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது இவருடன் காதல் வயப்பட்டேன்.
இவர் தற்போது அமெரிக்காவில் மருத்துவராக இருக்கிறார். அந்த காலத்தில் பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகள் ஒரே காம்பவுண்டில் தான் இருந்தன. அங்கேதான் எனக்கு சத்யா மீது ஒரு தலைக் காதல் தோன்றியது. அவர் என்னை கண்டுகொள்ள மாட்டார் என்றுதான் நினைத்தேன்.
ஏனென்றால் அவளுடன் பணக்கார வீட்டுப் பையன்கள் பலர் இருந்தனர். எனது இந்த காதல் கதையை அடிப்படையாகக் கொண்டுதான் ரங்கீலா படத்தின் கதையை எழுதினேன் என கூறியுள்ளார். என்னதான் முன்னாள் காதலியாக இருந்தாலும் அவரது அனுமதி இல்லாமல் எப்படி அவரது புகைப்படத்தை பகிரலாம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவர் நடிகர் சூர்யாவை வைத்து தெலுங்கு, ஹிந்தியில் ரத்த சரித்திரம் என்ற படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.