திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

திருமணம் செய்துகொண்ட லிவிங் டு கெதர் ஜோடி.. யூடியூப் பண்ணிய வேலை இப்ப கல்யாணத்துல முடியுது

கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது ராமுக்கும், ஜானுக்கும். ராம் ஜானு லிவிங் டுகெதர் மூலம் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இப்பொழுது இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

ஜானுவின் உண்மையான பெயர் கீர்த்தி சாரதா, ராமுவின் பெயர் ராம் பாலாஜி. கீர்த்தி ராமுவும் ஒன்பதாவது படிக்கும் பொழுது ஸ்கூலில் நடைபெற்ற சயின்ஸ் எக்ஸிபிஷன் சென்றனர். அங்கு ராம் வேடிக்கை பார்க்க சென்றுள்ளார், ஜானு சயின்ஸ் எக்ஸ்பெரிமெண்ட் செய்து காட்டியுள்ளார். அதை பார்த்த ராமுவிற்கு ஜானு வை மிகவும் பிடித்துவிட்டது.

அதன் பிறகு பேஸ்புக்கில் கீர்த்தி என்ற பெயரில் உள்ள அனைவருக்கும் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்துள்ளார். யாரும் ரிப்ளை பண்ணவில்லை ஜானுவின் அண்ணனுக்கும் ஜானு என நினைத்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்துள்ளார்.

பதினோராம் வகுப்பு படிக்கும் பொழுது மீண்டும் சயின்ஸ் எக்ஸ்பெரிமெண்ட் நடந்துள்ளது. அப்பொழுது ஜானுவை பார்த்துவிட வேண்டுமென்ற சயின்ஸ் எக்ஸிபிஷன் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு எங்கு தேடியும் காணவில்லை ஜானு இல்லை சரி அவ்வளவுதான் என்று நினைத்தபோது ராம் ஃப்ரெண்ட்ஸ் வேற இடத்துல இதேபோல எக்ஸ்பிரிமெண்ட் நடக்குது, அங்கு போய் பார்ப்போம் என்று கூட்டிட்டு போனாங்க, அங்க போய் பாத்தா ஜானு. ராம் ஜானிடம் பேசி அவரது பிரண்ட்ஸ் ஆகி பிறகு இருவரும் காதலித்தனர்.

ஜானுவின் தந்தை சினிமாவில் பணியாற்றினார். அப்போது பிசினஸ் பண்ணலாம் என்று கடன் வாங்கி பிசினஸ் தொடங்கினார். அது லாஸ் ஆக அவருக்கு ஸ்டோக் வருகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த ஜானு தனியார் கல்லூரியில் BCA படித்தார். அவரது அம்மாவும் எந்த வேலையும் செய்யவில்லை வீட்டிலேயே தான் இருந்தார்.

ram jaanu
ram jaanu

பார்ட்டைமாக ஆயுர்வேதிக் ப்ராடக்ட் விற்பனை செய்தார். கிடைத்த வேலையெல்லாம் செய்தார், பின்பு  தந்தை சினிமாவில் பணியாற்றி உள்ளதால் சினிமாவில் முயற்சி செய்யலாம் என்று முயற்சி செய்தபோது அபூர்வ ராகங்கள் தொடரில் நடித்தார். அப்பொழுது அவரது கால் நடக்க முடியாமல் போனது கவர்மெண்ட் ஹாஸ்பிடல் ஜானுவின் அம்மா சேர்த்தார் நரம்புக்கு இடையில் கட்டாகியுள்ளது. அதை அறுவை சிகிச்சை செய்து தான் நீக்கமுடியும் என்று கூறிவிட்டனர்.

ram-jaanu
ram-jaanu

அறுவை சிகிச்சை செய்த நீக்கினாலும் சரியாக நடக்க முடியாது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தனது வில் பவர் மூலமாக நன்றாக நடக்க தொடங்கினார். ராம் ஜானு காதலுக்கு ராம் வீட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது அவையெல்லாம் எதிர்த்து இருவரும் லிவிங் டுகெதர் மூலம் இருவரும் தனியாக வசித்து வந்தனர். அதையே  வீடியோவாகவும், இருவரும் சேர்ந்து டிராவலிங் செய்த அதையும் யூடியூப்பில் பதிவிட்டு அதிக லைக்குகளையும் அதிக வியூஸ்யும் பெற்றுவருகின்றனர்.

1.9 மில்லியன் சப்ஸ்கிரிபர் உள்ளனர். அதிக ரசிகர்களைப் பெற்ற ஜோடி ராம் ஜானு. இப்போது இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களது வரவேற்பு நிகழ்ச்சியில் இர்பான், மதன் கௌரி, ஜிக்கி டிஎன்ஏ சுபலட்சுமி, விக்னேஷ், இன்னைக்கு என்ன சமையல் சுனிதா, என பல யூடியூபேர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Trending News