வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கார்த்தியின் அடுத்தப் படத்தில் களமிறங்கிய கேஜிஎப் பட முரட்டு வில்லன்.. தமிழில் அடுத்தடுத்து இத்தனை படங்களா.?

உலகளவில் திரும்பிப் பார்க்க வைத்த முக்கியமான படம் கேஜிஎப். இந்த படத்தின் இறுதியில் கருடன் என்ற கதாபாத்திரத்தை ராக்கி தலை துண்டித்து கொன்றுவிடுவார்.

அவரின் உண்மையான பெயர் தான் ராமச்சந்திர ராஜு. இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகி கொண்டு இருக்கிறது. படத்தின் டீசர் நேற்று வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

கே ஜி எஃப் படத்தில் கருடன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராமச்சந்திர ராஜு தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதாவது சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், கே ஜி எஃப் படத்தில் தனது முரட்டுத்தனமான நடிப்பை பார்த்து தமிழ் சினிமா இயக்குனர்கள் அடுத்தடுத்த படங்களில் கமிட் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

kgf movie
kgf movie

இதனை அடுத்து கார்த்திக்குடன் சுல்தான் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும், விஜய் ஆண்டனியுடன் மற்றும் ஒரு படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் கால் பதித்துள்ளார் ராமச்சந்திர ராஜு.

ஒரே நேரத்தில் இவ்வளவு படங்களில் நடிக்க உள்ள ராமச்சந்திர ராஜு கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

Trending News