வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 14, 2025

வலிமை பர்ஸ்ட் லுக் கூட இல்லாமல் அடுத்த படமா.? ஓடாத படத்தை வாங்கிய போனி கபூரை திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள்!

வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கனவருமான போனி கபூர் இப்போது பிசியான செட்டியூலில் வலம் வரும் பைனான்சியர்.

இவர் தற்போது தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் தயாராகும் வலிமை பட வேலைகளில் படு பிசி.

படத்தின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் இப்போது போனி அடுத்த போணிக்கு தயாராகிறார்.

வட இந்திய படங்களை பெரிதும் தயாரித்து வந்த போனி இப்போது தென்னிந்தியாவின் பக்கம் தலை சாய்கிறார். அடுத்தடுத்து 5 படங்கள் வரை இவர் தென்னிந்திய படங்களை தயாரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் வலிமைக்கு பிறகு ஒரு வலுவான கதை தேடி வந்தவருக்கு சமீபத்தில் கண்ணில் பட்டது மெகா ஸ்டார் மம்முட்டி நடித்த “ஒன்”. சட்டென தயாரான போனி நல்ல நடிகர் மற்றும் இயக்குனர் தேடலில் உள்ளாராம்.

மலையாளத்தில் இந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. ஆனால் இந்த படத்தின் ரீமேக் ரைட்ஸை போனிகபூர் வாங்கியுள்ளாராம். இப்படி ஓடாத படத்துக்கு காசை கொட்டுவதை விட வலிமை அப்டேட் கொடுங்கள் என்று அஜித் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

mammooty
mammooty

Trending News