இப்பொழுது அஜித், விஜய் ஆனால் 80 கால கட்டங்களில் மோகன் மற்றும் ராமராஜன் தான். இவர்களது படம் எப்பொழுது வெளிவரும் என்று திருவிழா போல் காத்துக் கொண்டிருப்பார்கள். ரசிகர்கள். அதுவும் ஒரு சேர வந்துவிட்டால் கலை கட்டும். ரஜினி, கமலை விட அந்த காலத்தில் அதிகமாக இவர்கள் சம்பளம் வாங்கி வந்தனர்.
தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ முதல் முதலாக ஒரு கோடி வாங்கியது என்றால் அது ராமராஜன் தான். எம்ஜிஆரின் தீவிர விசுவாசி. இதனாலையே ஜெயலலிதா இவரை அழைத்து அதிமுகவில் சீட் கொடுத்தார். திருச்செந்தூர் தொகுதியில் இன்று ஒரு முறை வெற்றி பெற்றார்.
ராமராஜன் பலமுறை சில்வர் ஜூப்ளி படம் கொடுத்துள்ளார். கரகாட்டக்காரன், அம்மன் கோயில் வாசலிலே, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்கள் இவர் நடித்து சூப்பர் ஹிட் ஆனது. அதுவும் கரகாட்டக்காரன் மதுரையில் ஒரு தியேட்டரில் ஒரு வருடம் ஓடி சாதனை செய்தது.
மைக்கை விட கௌரவத்தில் ஜெயிச்ச கரகாட்டக்காரன்
63 வயதாகும் ராமராஜன் ஓடி ஓடி சினிமாவில் சம்பாதித்து, இன்று அவருடைய கஜானாவில் 20 கோடிகள் வரை சொத்துக்கள் வைத்திருக்கிறார். இவரிடம் ஜெயலலிதா பரிசாக கொடுத்த இன்னோவா கார் ஒன்றும், ஷிப்ட் கார் ஒன்றும் இருக்கிறது. ராமராஜனுக்கு சென்னையில் சொந்தமாக நான்கு வீடுகள் இருக்கிறது. கடைசி வரை நடித்தால் ஹீரோ தான் என்று இன்றுவரை கெத்து காட்டி நடித்தும் வருகிறார்.
இவருக்கு அந்த காலத்தில் சினிமாவில் சரியான போட்டி கொடுத்தது மோகன் தான். இவரும் இவர் பங்கிற்கு பல சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்துள்ளார். பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, விதி என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தியுள்ளார் மோகன். 68 வயதாக மோகனிடம் இன்று 30 கோடிகள் வரை சொத்துக்கள் இருக்கிறது. மோகன் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பல வருடங்கள் காத்திருந்தார் ஆனால் இப்பொழுது அந்தக் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டார். கோட் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறார்.