வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தீவிர மன அழுத்தத்தில் இருக்கும் ராமராஜன் பட நடிகை.. வருடக் கணக்கில் வீட்டுக்குள் முடங்கி போன மர்மம்

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையான புகழுடன் இருந்தவர் தான் ராமராஜன். இவருடைய பல திரைப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி இருக்கிறது அதனாலேயே தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர் நடித்துக் கொண்டிருக்கும் சாமானியன் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் ராமராஜனுக்கு ஜோடியாக அறிமுகமாகி புகழின் உச்சிக்குச் சென்ற ஒரு நடிகை தற்போது இருக்கும் இடமே தெரியாமல் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகளான இவர் இப்போது படங்களில் நடிப்பதில்லை.

Also read: ராமராஜன் மறுத்த 5 இரண்டாம் பாக படங்கள்.. விஜய் மில்டனை விரட்டியடித்த வில்லுபாட்டுகாரன்

ரஜினி, கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர் இப்போது வீட்டை விட்டு வெளியே வருவதே கிடையாது. அது மட்டுமல்லாமல் தன் தாய் இறந்த பிறகு சொத்துக்களை பராமரிப்பது தொடர்பாக எழுந்த மன அழுத்தத்தின் காரணமாக இவர் இப்போது வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டாராம்.

இது குறித்து சில வருடங்களுக்கு முன்பு பல செய்திகள் மீடியாவில் வெளிவந்தது. அதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்த கனகா தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். ஆனாலும் அவரை பொதுவெளியில் யாரும் பார்ப்பது கிடையாது. ஏனென்றால் அவர் தன் சொந்த வேலைகளுக்காக கூட வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.

Also read: பல்லுப்போன வயதில் டூயட் பண்ணும் ராமராஜன்.. வளர்ச்சியைக் கெடுத்துக் கொண்ட 28 வயது இளம் நடிகை

இதிலேயே அவருக்கு எந்த அளவுக்கு மன அழுத்தம் இருக்கிறது என்பது தெரிகிறது. இதற்கு ஒரு உதாரணமாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது நடிகை கனகாவின் வீட்டில் திடீரென தீப்பிடித்து இருக்கிறது. இதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர். அதனால் கனகா வீட்டுக்கு வந்த தீயணைப்பு அதிகாரிகளை அவர் உள்ளே வரக்கூடாது என்று பெரும் பிரச்சனை செய்திருக்கிறார்.

இதனால் வேறு வழி இல்லாமல் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு அந்த தீயை அணைத்து அதிக சேகாரம் ஆகாமல் காப்பாற்றி இருக்கிறார்கள். அப்போது கனகா ரொம்பவும் வித்தியாசமாக நடந்து கொண்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் அவர் தனக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றே தெரியாமல் வீட்டிற்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் எதற்காக வீட்டிற்குள்ளேயே இருக்கிறார் என்ற மர்மமும் யாருக்கும் தெரியவில்லை. இந்த தகவல் தற்போது ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: நடிப்பே வேண்டாம் என ஒதுங்கிய மார்க்கண்டேயன்.. ராமராஜன், மோகன் போல் இல்லாமல் ஒதுங்கும் சீனியர்

Trending News