புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ரஜினி படத்தையே ஓவர் டேக் செய்து லாபம் பார்த்த ராமராஜன்.. சீக்ரெட்டா காய் நகர்த்திய மக்கள் நாயகன்

Actor Ramarajan: ரஜினி படம் வெளியாகிறது என்றால் மற்ற ஹீரோக்கள் எல்லாம் பின்வாங்கி விடுவார்கள். அதே போல் அவருடைய படத்தின் பிசினஸ் உலக அளவில் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டாருக்கு டஃப் கொடுத்த நடிகர் தான் ராமராஜன். 80 காலகட்டத்தில் கிராமத்து நாயகனாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பெருமை இவருக்கு உண்டு.

ஆனால் எந்த வேகத்தில் உச்சாணி கொம்புக்கு சென்றாரோ அதே வேகத்தில் காணாமல் போனார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் சாமானியன் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

ரஜினியை முந்திய ராமராஜன்

அந்த வகையில் தற்போது ஒரு பேட்டியில் இவர் ரஜினி படத்தை முந்தியது பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் ரஜினி, கமல் தான் வசூல் நாயகனாக இருந்தார்கள்.

ஆனால் அவர்களே கொஞ்சம் மிரளும் அளவுக்கு ராமராஜன் கிடுகிடுவென வளர்ந்தார். அப்படி 80 காலகட்டத்தில் ரஜினியின் மாப்பிள்ளை படத்துடன் ராமராஜனின் தங்கமான ராசா, அன்பு கட்டளை ஆகிய படங்கள் மோதி இருக்கிறது.

அதில் தங்கமான ராசா 1.25 லட்சம் ஷேர்களை தாண்டி சென்றதாம். ஆனால் ரஜினியின் மாப்பிள்ளை ஒரு லட்சம் ஷேர் தான் பெற்றது என அவர் கொஞ்சம் பெருமையாக கூறியுள்ளார்.

ஆனால் அதன் பிறகு நான் பின்தங்கி விட்டேன். ரஜினி இந்த வயதிலும் அடுத்தடுத்து நடித்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் என புகழ்ந்து பேசி உள்ளார்.

Trending News