புதன்கிழமை, ஜனவரி 8, 2025

கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் வெங்கட் பிரபு படத்துல நடிக்க மாட்டேன்.. பதற வைத்த ராமராஜன் கூறிய காரணம்

Actor Ramarajan: மக்கள் நாயகனாக தனி இடத்தை பிடித்த ராமராஜன் பல வருடங்களுக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் சாமானியன் பட ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது.

அதையடுத்து அவர் இப்போது பல சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் பல விஷயங்களைப் பற்றி பேசி இருக்கும் அவர் வெங்கட் பிரபு பட வாய்ப்பு பற்றியும் மனம் திறந்துள்ளார்.

அந்த வகையில் ஆர் ஜே பாலாஜியின் எல்கேஜி பட வாய்ப்பை இவர் மறுத்திருக்கிறார். ஏனென்றால் இடைவேளைக்கு பிறகு தான் இவருடைய கதாபாத்திரம் வரும்படி இருந்ததாம்.

ராமராஜனின் கொள்கை

அதை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளிவராமல் இருக்கும் பார்ட்டி படத்திலும் இவரை அணுகி இருக்கிறார்கள். ஆனால் சில காரணங்களால் அதில் நடிக்க மறுத்திருக்கிறார்.

அதன் பிறகுதான் அப்படத்தின் போஸ்டரை பார்த்து நல்ல வேளை நான் நடிக்கல என சந்தோஷப்பட்டாராம். ஏனென்றால் அதில் சரக்கு, தம் என இருந்திருக்கிறது.

இந்த மாதிரி காட்சிகளில் நடிக்க எனக்கு கோடி கோடியாக சம்பளம் கொடுத்தாலும் நான் நடிக்க மாட்டேன். இதை நான் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் இந்த மாதிரி காட்சிகள் இப்போது உச்ச நடிகர்களின் படங்களிலேயே இருப்பது தான் வேதனை.

Trending News