தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்தவர் தான் மக்கள் நாயகன் ராமராஜன். ஒரு நடிகனாக, இயக்குநராக மற்றும் அரசியல்வாதியாக வாழ்ந்து ரசிகர்கள் மத்தியில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நடிப்பைத் தாண்டி மண்ணுக்கேத்த பொண்ணு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 1989ஆம் ஆண்டு ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் கரகாட்டக்காரன்.
காமெடி, காதல், சென்டிமென்ட் என பட்டையை கிளப்பிய இந்த படம் ராமராஜனை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு இது 100வது வெற்றி படமாக அமைந்தது.
இந்த படத்தில் நடிப்பதற்காக ராமராஜனுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர். இந்த சமயத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட 30,000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தாராம்.
இதை வைத்து பார்க்கும் போது 3 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளார் ராமராஜன். அப்படி கொடிகட்டிப் பறந்த ராமராஜன், சினிமாவில் ஏற்பட்ட சறுக்கல் தொடர முடியாமல் அரசியலுக்குத் சென்று விட்டார்.

ராமராஜன் கடைசியாக நடித்த படம் 2012ம் ஆண்டு மேதை என்ற படத்தில் நடித்தார் அதற்குப்பின் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.