ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அஜித் மாதிரி மாறிய ராமராஜன்.. ட்ரெய்லரை தெறிக்கவிட்ட சாமானியன்

Ramarajan in Samaniyan Trailer: ராமராஜன் ஒரு காலத்தில் ரஜினி மற்றும் கமலுக்கு போட்டியாக இருந்து குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் அளவிற்கு கிராமத்து படங்களை கொடுத்து மக்கள் நாயகனாக பெயர் எடுத்தார். அந்த காலத்தில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அனைவருக்கும் பிடிக்கும் ஒரே நடிகர் என்றால் இவராகத்தான் இருக்க முடியும்.

அப்படிப்பட்ட இவருடைய படத்தை மறுபடியும் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு முன் மேதை என்ற படத்தின் மூலம் திரையில் பார்க்க முடிந்தது. அதன் பின் இப்பொழுதுதான் சாமானியன் என்ற படத்தின் மூலம் வர இருக்கிறார்.

இப்படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன் வெளிவந்தது. ட்ரெய்லரில் ராமராஜனை பார்க்கும் பொழுது ஒரு இணை புரியாத சந்தோஷம் ஏற்படுத்துகிறது. அதிலும் பழைய காம்போவை திரும்பி பார்க்கும் அளவிற்கு இளையராஜா மெட்ட அமைத்து கொடுத்திருக்கிறார்.

இப்படத்தை இயக்குனர் ஆர் ராஜேஷ் என்பவர் இயக்கியிருக்கிறார். அத்துடன் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், மைம் கோபி, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது கொஞ்சம் துணிவு படத்தை ஞாபகப்படுத்துகிறது.

அஜித் கதையில் நடிக்கும் ராமராஜன்

அதாவது துணிவு படத்தில் எப்படி அஜித் ஒரு வங்கிக்கு போயி பணத்தை கொள்ளை அடித்து அதன் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறாரோ அதே மாதிரி ராமராஜனும் மாறி இருக்கிறார். இருந்தாலும் அவருடைய பாணியில் மக்களை கவரும் வகையில் நடிப்பை பிரமாதமாக கொடுத்திருக்கிறார்.

இப்படம் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது. அத்துடன் ராமராஜன் படத்தை பார்ப்பதற்கு 90ஸ் 80ஸ் மக்கள் ரொம்பவே ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இப்படத்தின் மூலம் மறுபடியும் மக்கள் நாயகனாக வெற்றி வாகை சூடப் போகிறார்.

ஆனாலும் இன்னொரு பக்கம் இப்போ இருக்கிற அஜித் ரசிகர்கள், இந்த படத்தின் டிரைலரை பார்த்து கடுப்பில் இருக்கிறார்கள். காரணம் துணிவு படத்தை அப்படியே பார்த்து காப்பி அடித்தது போல் இருக்கிறது என்று கொஞ்சம் டென்ஷன் ஆகி வருகிறார்கள்.

எது எப்படியோ ராமராஜன் 11 ஆண்டுகள் கழித்து சாமானியன் படத்தின் மூலம் ட்ரெய்லரை தெறிக்க விட்டிருக்கிறார். இவருடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

Trending News