வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அழகுல அம்மாவை மிஞ்சிடுவாங்க போல.. சோடா புட்டி கண்ணாடியுடன் ரம்பா மகளின் வைரல் புகைப்படம்

உழவன் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்பா. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். தற்பொழுது இவரின் மூத்த மகளின் போட்டோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இடம் பெற்ற ரம்பாவுக்கு உள்ளத்தை அள்ளித்தா மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டே மேஜிக் புட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனி அம்பாசிடர் ஆகவும் மாறினார் ரம்பா.

Also Read: ராமராஜனுக்கு போட்டியாக இறங்கிய லெஜன்ட்.. அடுத்த படத்திற்கு தயாரான அண்ணாச்சியின் புகைப்படங்கள்

அந்த நட்பின் அடிப்படையில் அதன் உரிமையாளர் இந்திரகுமார் பத்மநாபனை காதலித்து 2010ல் திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து இரு மகளுக்கு தாயான இவர் சில காலம் கருத்து வேறுபாடு காரணமாக தன் கணவனை பிரிந்து இருந்தார்.

ஜெராக்ஸ் போல் இருக்கும் ரம்பா மகள்

rambha-daughter-laanya
rambha-daughter-laanya

அதன் பின் ஒன்று சேர்ந்த இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரம்பா தன் சோசியல் மீடியா பதிவில் தன் மகளான லாவண்யாவின் போட்டோவை பகிர்ந்துள்ளார். அச்சு அசல் ரம்பாவை போலவே இருக்கும் முகபாவனை கொண்ட இவரின் புகைப்படம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

Also Read: லியோ படத்திற்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் வெங்கட் பிரபு.. விஜய் செய்த செயலால் ஹேப்பியான லோகேஷ்

ரொம்ப மறுபடியும் குழந்தையாகி விட்டாரா என்னும் அளவுக்கு அந்த போட்டோ இருக்கிறது. இது ரம்பாவின் மகளா அப்படியே ஜெராக்ஸ் மாதிரி இருக்கிறாரே என்று வியப்படையும் அளவிற்கு இவர்களிடையே ஒற்றுமை இருந்து வருகிறது. மேலும் பள்ளி விழாவில் பங்கேற்ற விருது பெற்ற தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு வரும் ரம்பா அது குறித்து பெருமையாகவும் பேசி உள்ளார்.

இப்போது வாரிசு நடிகைகள் நடித்து வரும் நிலையில் ரம்பா தன் மகளை சினிமாவிற்கு கொண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோ இயக்குனர்களின் கண்ணில் பட்டால் உடனே ரம்பாவை தேடிச் சென்றாலும் ஆச்சரியம் இல்லை.

Also Read: விஜய், அஜித் சினிமாவை விட்டுப் போகணும்னு ஆசைப்படும் 5 நடிகர்கள்.. ஒரே ஒரு வாய்ப்புக்காக ஏங்கும் தங்கலான்

Trending News