ஒரு பக்கம் மாஸ்டர் படத்தை எப்படியாவது தோல்விப்படம் என நிரூபித்தாக வேண்டும் என கஷ்டப்பட்டு ஒரு குரூப் வேலை செய்துவரும் நிலையில் படம் அசால்டாக பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை அடித்து நொறுக்கி உள்ளது. ஒரு படம் ஒரே நேரத்தில் தியேட்டரிலும் ஓடிடியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்றால் அது மாஸ்டர் படம் தான்.
ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு முன்பு மிகப்பெரிய கட்டையை போட்டனர் தியேட்டர் உரிமையாளர்கள். ஆனால் அமேசான் தளத்தில் வெளியான பிறகும் கூட மாஸ்டர் படம் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருவது பல நடிகர்களும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளதாம்.
மாஸ்டர் படம் தற்போது வரை உலகம் முழுவதும் 240 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விட்டதாம். ஆனால் இன்னமும் மாஸ்டர் படம் பிளாப் என ஒரு கூட்டம் கதறிக் கொண்டிருக்கிறது. விஜய் படங்களுக்கு எப்போதுமே பேவரிட் தியேட்டராக இருப்பது திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ் தான்.
மற்ற நடிகர்களின் படங்களை காட்டிலும் விஜய் படங்களுக்கு இந்த தியேட்டரில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். பல இடங்களில் சுமாராக ஓடிய விஜய் படங்கள் ராம் சினிமாஸ் தியேட்டரில் மட்டும் வசூலை வாரி குவித்துள்ளது. இந்நிலையில் சமீப காலமாக ராம் சினிமாஸ் திரையரங்கில் மாஸ்டர் படம் சரியாகப் போகவில்லை எனவும், வேண்டுமென்றே தியேட்டர்காரர்கள் படத்தை ஓட்டுவதற்காக விளம்பரங்கள் செய்து கொண்டு இருக்கின்றனர் எனவும் கூறினார்.
அதற்கு உடனடியாக ராம் சினிமாஸ் நிறுவனம் தக்க பதிலடி கொடுத்து ஒரு ட்வீட்டை போட்டுள்ளது. மேலும் தற்போதைக்கு ராம் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் மாஸ்டர் படம் தான் முதலிடம் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராம் சினிமாஸ் மட்டுமல்ல, பல திரையரங்குகளில் மாஸ்டர் படம் தான் நம்பர் ஒன் கலெக்ஷன் என்பதை அதிகாரபூர்வமாக தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் அறிவித்துள்ளனர் என்பதும் கூடுதல் தகவல்.