திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

80’s சாக்லேட் பாய்.! ஹேர் ஸ்டைல் சீக்ரெட். மனம் திறந்த ராம்கி.

ராம்கி என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது அவருடைய ஹேர் ஸ்டைலும், நடிப்பும் தான். அவர் நடிக்கும் காலத்தில் அவர்தான் இளைஞர்களுக்கு ரோல்மாடல். இளைஞர்கள் அனைவரும் ராம்கி போல் ஹேர் ஸ்டைலும், டிரெஸ்ஸிகும் பண்ணிக் கொண்டுதான் சுற்றுவார்களாம்.

ரஜினி, கமல், கார்த்திக், பிரபு காலத்தில் அவர்களுக்குக் போட்டி கொடுத்தவர் ராம்கி. இவர் எந்தவித பின்புலம் இன்றி சினிமா துறையில் வெற்றி கண்டவர். அவர் காலகட்டத்தில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

ராம்கி என்றாலே ஒரு தனித்துவமான ஹேர் ஸ்டைல் இருக்கிறது. இயற்கையாகவே அவருக்கு அப்படி ஒரு ஹேர்ஸ்டைல் அமைந்துவிட்டதாம். முடி வளர்ப்பதற்கு என்று அவர் எதையும் தனித்துவமாக செய்யவில்லையாம். இன்றுவரை அவருக்கு முடி நரைத்து விட்டதே தவிர அவருடைய இளமையும், அதே ஹேர் ஸ்டைல் கொண்ட முடியும் அப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறது.

ramki
ramki

ஹீரோவாக ஒரு ரவுண்ட் வந்த ராம்கி இப்பொழுது பல படங்களில் கேரக்டர் ரோல் பண்ணிக் கொண்டிருக்கிறார். இவர்1995 ஆம் ஆண்டு நடிகை நிரோஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Trending News