புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ரியல் கம்பேக் கொடுத்தது ராம்கி தான்.. யோவ் வெங்கட் பிரபு காதுல விழுந்துச்சா?

லக்கி பாஸ்கர் படம் ஸ்லோ பிக்கப் ஆனாலும் கடைசியில் ரியல் வெற்றி அடைந்தது இந்த படம் தான். இந்த படத்தின் மூலம் துல்கர் சல்மானுக்கு எந்த அளவுக்கு பெயர் கிடைத்ததோ, அதே அளவுக்கு நம்ம ராம்கியும் நடித்து அசத்தி விட்டார்.

லக்கி பாஸ்கர் படத்தில் ஆண்டனி என்ற காதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ராம்கி. அவருக்கு வெறும் 40 நிமிட காட்சிகள்தான். ஆனா அந்த கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமாக நடித்திருப்பார். அவருக்கு இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய கம்பேக் தான்.

இதேபோல் மிகவும் அதிகமாக எதிர்பார்த்தது நடிகர் மோகனின் கம்பேக்தான். ஆனால் வெங்கட் பிரபு கோட் படத்தில் அவரை மிகவும் டம்மியாக காமித்து விட்டார்.

இனிவரும் காலங்களில் லக்கி பாஸ்கர் மூலம் நடிகர் ராம்கிக்கு மிகப்பெரிய எதிர்காலம் கண்டிப்பாக உண்டு. அடுத்து ரவுடி பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டம்மியாக காண்பித்தாலும் பரவாயில்லை ஆனால் நடிகர் மோகனை மீம் மெட்டீரியலாக மாற்றியே விட்டார்கள். இந்த பெருமை அனைத்தும் வெங்கட் பிரபுவின் டீமுக்கு தான் சேரும்.

ஒரு வெள்ளி விழா நாயகனை இப்படி பண்ணிட்டீங்களேடா என்று பழைய மைக் மோகன் ரசிகர்கள் வேதனையில் இருக்கிறார்கள்.

Trending News