தமிழ் சினிமாவில் என்றும் 16 ஆக தனது வசீகர சிரிப்பார் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருபவர். இவருடைய கம்பீரமான தோற்றமும் வசீகரமான அழகும் ரசிகர்களிடையே அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது.
தன்னுடைய 14 வயதில் இருந்தே சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார்.
இருப்பினும் பெரிய அளவில் தமிழில் வாய்ப்புகள் வராததால் சற்றே கலக்கம் அடைந்த ரம்யா கிருஷ்ணன் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் ஆட்டமா தேரோட்டமா பாடல் இன்றும் ரசிகர்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்றால் ரம்யா கிருஷ்ணனின் நடனமும் ஒரு முக்கிய காரணமாகும். அது அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தெலுங்கில் பிஸியான நடிகையாக மாறினார்.
திரைப்படங்களில் அம்மனாக வேடமிட்டு அனைத்து பெண்களின் ஆதரவையும் பெற்றார். படையப்பா படத்தில் ரஜினிக்கு எதிர்மறையான கதாபாத்திரமாக வில்லி கதாபாத்திரத்தில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்த நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். இவ்வாறு இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
2003 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரம்யா கிருஷ்ணன் தான் கிருஷ்ண வம்சிக்கு முதல் மனைவி என்று எண்ணியிருந்த நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் அவர்கள் ரம்யாகிருஷ்ணன் வம்சிக்கு இரண்டாவது மனைவி என்ற ரகசியத்தை உடைத்த இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.