செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

அந்த கேரக்டரில் நடித்ததால் என் மீது செருப்பை வீசினார்கள்.. ராஜமாதா ஓபன் டாக்

ஹீரோயினாக நடித்து பிரபலமானதைவிட வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயரும், புகழும் பெற்றவர் தான் முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன். ஹீரோயினாக ஒரு சில படங்களில் மட்டுமே ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தாலும், வில்லியாக ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் கேரக்டரில் தான் இவர் நடிப்பார்.

அந்த வகையில் ரம்யா கிருஷ்ணன் கெரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது படையப்பா மட்டும் தான். இந்த படத்தையும், இதில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனையும் மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். மறக்கும் அளவிற்கு ரம்யா கிருஷ்ணன் ஒன்றும் இதில் சாதாரணமாக நடிக்கவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கே வில்லியாக நடித்து மிரட்டியிருப்பார்.

இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து படையப்பா படம் குறித்து ரம்யா கிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “என் கெரியரில் மிக முக்கியமான படம் படையப்பா. அதில் என்னை வில்லி நீலாம்பரி ரோலில் நடிக்க அணுகியபோது, ஹீரோயின் ரோல் கிடைத்திருந்தால் நடித்திருக்கலாமே என நினைத்தேன். ஆனாலும், ரஜினி பட வாய்ப்பு என்பதால் விருப்பம் இல்லாமல் அதில் நடித்தேன்.

அப்படத்தின் ரிலீஸ் அன்று எனது தங்கை திரையரங்கில் சென்று பார்க்கையில், ஸ்க்ரீனில் ரஜினிக்கு வில்லியாக என்னை பார்த்ததும் ரசிகர்கள் செருப்பை கழட்டி ஸ்க்ரீன் முன்பு வீசியிருக்கிறார்கள். அதை பார்த்துவிட்டு என் தங்கை என்னிடம் சொன்னதும், நான் என் கேரியர் அவ்வளவுதான் என்று நினைத்தேன்.

பின், அடுத்த ஒரு வாரத்தில் அந்த கேரக்டரில் நடித்ததற்காக எனக்கு ரசிகர்கள் மத்தியிலும், திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டு மழை பொழிந்தது” என கூறியுள்ளார். ஒரு நல்ல கலைஞருக்கு இதைவிட சிறந்த பாராட்டு எதுவும் இருக்க முடியாது.

ரம்யா கிருஷ்ணன் எந்த அளவிற்கு நீலாம்பரியாக நடித்திருந்தால் ரசிகர்கள் ஆத்திரப்பட்டு செருப்பை வீசியிருப்பார்கள். அப்போ ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக வாழவில்லை வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். நீலாம்பரிக்கு பின்னர் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கேரக்டர் தான் ரம்யா கிருஷ்ணனுக்கு பெயர் சொல்லும் கேரக்டராக அமைந்தது.

- Advertisement -spot_img

Trending News