திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

24 வருடத்திற்கு முன் விட்ட சபதத்தை நிறைவேற்றிய ரம்யா கிருஷ்ணன்.. கல்யாணத்தில் முடிந்த லட்சியம்

Ramya Krishnan: பொதுவாக ஏழு ஜென்மம் உண்டு என்று சொல்வார்கள். அது எந்த வகையில் உண்மையானது என்று யாருக்கும் தெரியாது. அதே நேரத்தில் இந்த ஜென்மம் மட்டுமில்லை ஏழு ஜென்மமும் நான் உன் கூட சேரனும் என்று வாய் வார்த்தைக்காக பலரும் சொல்றதை பார்த்திருப்போம். அப்படித்தான்  24 வருடத்திற்கு முன்  ரம்யா கிருஷ்ணன் அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம் என்று ஒரு சபதத்தை  போட்டிருந்தார்.

அதாவது 24 வருடத்திற்கு முன் ரம்யா கிருஷ்ணன் உயிருக்கு உயிராக வெறித்தனமான ஒரு காதலை வைத்திருந்தார். அத்துடன் இந்த கல்யாணம் எப்படியும் நல்லபடியாக முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் மனதார வாழ ஆரம்பித்து விட்டார். ஆனால் இவருடைய முன் கோபம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையால் அந்த காதல் இவரை விட்டு பிரிந்து விட்டது.

Also read: இது என்ன ரஜினிக்கு வந்த சோதனை.. ஜெயிலர் படத்தால் சூப்பர் ஸ்டாரை தேடி வந்த பெரும் சிக்கல்

இதனால் வேற யாரையும் திருமணம் செய்யாமல், கல்யாணம் பண்ணினால் இவரைத்தான் பண்ணுவேன் என்று இலட்சியத்துடன் இருந்தார். இவருடைய லட்சியம் வீணாகவில்லை 24 வருடங்கள் ஆன நிலையில் தற்போது இவருடைய காதல் கல்யாணத்தில் முடிந்து விட்டது. அதாவது 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார்.

இதில் ரஜினியை துரத்தி துரத்தி காதலித்து எப்படியாவது கல்யாணத்தை பண்ணியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிவார் நீலாம்பரி. ஆனால் ரஜினியோ, பெண்கள் என்றால் சாந்தமாகவும், பார்த்தவுடன் கையெடுத்து கும்பிடுற மாதிரி இருக்கணும் என்று சொல்லி, இவர் வீட்டு வேலைக்காரியாக இருந்த சௌந்தர்யாவை திருமணம் செய்து கொள்வார். இதனால் பழி வாங்குவதற்காக படத்தில் 20 வருஷமாக ஒரு தனி அறைக்குள் முடங்கி கிடப்பார்.

Also read: ஐட்டம் டான்ஸ் ஆடி பண மழையில் குளித்த 5 நடிகைகள்.. ஹீரோயினை விட அதிகம் லாவிட்டு போன ரம்யா கிருஷ்ணன்

அதே நேரத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் ரஜினியிடம் அடுத்த பிறவியில் நான் உன்னை பழி வாங்குவேன் என்று சபதம் போட்டிருப்பார். அதற்கு ரஜினி உன்னுடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார். இதனைத் தொடர்ந்து நீலாம்பரி ஆசைப்பட்ட மாதிரி இந்த ஜென்மத்திலேயே அது நடந்து விட்டது.

24 வருடத்திற்கு முன்னதாக விட்ட சபதத்தை போராடி நிறைவேற்றியுள்ளார் ரம்யா கிருஷ்ணன். நெல்சன் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் இந்த மாதம் 10ம் தேதி என்று திரையரங்குகளில் வர இருக்கிறது. இதில் ரம்யா கிருஷ்ணனின் 24 வருட காதல் இப்படத்தில் கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. அதாவது ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நீண்ட நாள் ஆசையை நடித்து நிறைவேற்றிக் கொண்டார்.

Also read: ஐட்டம் டான்ஸராக ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சி ஆட்டம் போட்ட 6 பாடல்கள்.. கண்ணுக்குள்ளே நிற்கும் ஆட்டமா தேரோட்டமா

Trending News