புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரம்யா கிருஷ்ணன் அந்த இயக்குனரின் இரண்டாவது மனைவியாமே? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகை என்று சொன்னாலும் அனைவரும் கைகாட்டி சொல்வது ரம்யா கிருஷ்ணனை தான். அந்தக் காலத்தில் தன்னுடைய அழகாலும் வசீகரத்தாலும் இந்திய அளவில் பிரபலமாக பேசப்பட்ட நடிகையாக வலம் வந்தார்.

ஆரம்பத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜா எங்க ராஜா என்ற படத்தில் கூட நடித்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம்தான் கேப்டன் பிரபாகரன்.

கவர்ச்சி நிறைந்த இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வரத்தொடங்கினார். தெலுங்கு என்றால் சொல்லவா வேண்டும்.

தெலுங்கு, ஹிந்தி என கவர்ச்சியில் மிரள வைத்த ரம்யாகிருஷ்ணன் 2003ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவை சேர்ந்த கிருஷ்ணா வம்சி என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். அவரும் தெலுங்கில் மிகப்பெரிய இயக்குனர் தான்.

இவ்வளவு நாட்களாக ரம்யாகிருஷ்ணன் முதல் மனைவிதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் இவர் கிருஷ்ணவம்சி என்பவருக்கு இரண்டாவது மனைவி என்ற குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

கிருஷ்ணவம்சி பற்றிய செய்திகளில் ரம்யா கிருஷ்ணன் அவருக்கு இரண்டாவது மனைவி என்று எங்கேயுமே குறிப்பிடவில்லை. பயில்வான் ரங்கநாதனின் இந்த கருத்து பின்னாளில் சர்ச்சையை கிளப்பவும் வாய்ப்புள்ளது.

ramyakrishnan-krishnavamsi-cinemapettai
ramyakrishnan-krishnavamsi-cinemapettai

Trending News