வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒரே நடிகருடன் தங்கச்சி, மனைவி, மகளாக நடித்த ரம்யா கிருஷ்ணன்.. பிறந்தநாளில் வித்தியாசமான வாழ்த்திய நெட்டிசன்கள்

ரம்யா கிருஷ்ணன் மிகவும் திறமையானவர். எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்து விடுவார். இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர். ஆனால் இன்றும் நடிகையாக அசத்தி கொண்டிருக்கிறார்.காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும்.

பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள். ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி. 35 வயதில் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 50 வயதிலேயும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.

சமீபத்தில்கூட ஜெயலலிதா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த குயின் வெப் சீரியஸில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற  நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

எனவே ரம்யா கிருஷ்ணனின் பிறந்த நாளன்று அவருக்கு வித்தியாசமான முறையில் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரம்யா கிருஷ்ணன், நடிகர் நாசருடன் மனைவியாக பாகுபலியும்,

ramya-krishnan-cinemapettai
ramya-krishnan-cinemapettai

மகளாக வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலும், தங்கையாக படையப்பா படத்திலும் நடித்து அசத்தியிருப்பார். அத்துடன் நாசருடன் மகளாக மனைவியாக தங்கச்சியாக நடித்த,

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் என்று அந்தப் படங்களில் இருக்கும் புகைப்படங்களை கொலாஜ் செய்து ரம்யா கிருஷ்ணனுக்கு நெட்டிசன்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Trending News