புதன்கிழமை, நவம்பர் 20, 2024

முதல்நாளே சிபியிடம் கரடுமுரடாக நடந்துகொண்ட ரம்யா கிருஷ்ணன்.. ஓரவஞ்சனை செய்த நீலாம்பரி

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்று தொகுத்து வழங்கினார்.

கமலின் அறிமுகத்துடன் பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைந்த ரம்யா கிருஷ்ணன் போட்டியாளர்கள் இடம் கலகலப்பாக உரையாடினார். போட்டியாளர்கள் ஒவ்வொருவரை பற்றியும் தன்னுடைய கருத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் ரம்யா கிருஷ்ணன், சிபியிடம் பேசும் பொழுது மட்டும் சற்று கடுமையாக நடந்து கொண்டார். இந்த வார டாஸ்க்கில் சிபி வார்டனாக இருந்தார். அதைப் பற்றி குறிப்பிட்ட ரம்யா கிருஷ்ணன் அவரை சற்று கண்டிப்பது போல் பேசினார்.

மேலும் அங்கிருக்கும் மற்ற போட்டியாளர்களையும் சிபிக்கு எதிராக பேசுமாறு தூண்டிவிட்டார். ஏற்கனவே சிபியின் மீது கோபத்தில் இருந்த போட்டியாளர்கள் அவரைப்பற்றி ரம்யா கிருஷ்ணனிடம் குறை கூறினார்கள். அதை சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட ரம்யா கிருஷ்ணன் பெண்களுக்கு ஆதரவாக சிபியிடம் பேசினார்.

மேலும் சிபி, அக்ஷரா இருவருக்கும் நடந்த வாக்குவாதம் பற்றிய குறும்படம் போட்டு காண்பிக்கப்பட்டது. அதை பார்த்தவுடன் ரம்யா கிருஷ்ணன் அக்ஷராவிடம் சிபி அவ்வளவு ஒன்றும் மோசமாக நடந்து கொள்ளவில்லை என்று கூறினார். பின்னர் சிபியிடம் உங்களுக்கு பிடிக்காதவர்கள் மேல் நீங்கள் ஏன் இவ்வளவு கோபம் காட்டுகிறீர்கள் மாறாக அன்பு காட்டுங்கள் என்று கூறினார்.

ஆனால் இந்த வாரம் முழுவதும் சிபி தன்னுடைய கேரக்டரை சரியாக செய்து வந்தார். ஒரு வார்டன் எப்படி இருப்பாரோ அப்படித்தான் அவர் நடந்துகொண்டார். ஆனால் ரம்யா கிருஷ்ணன் பாரபட்சமாக ஒரு தீர்ப்பை வழங்கியது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

இதுவே கமல் இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு. ஸ்டுடென்ட் ஆக இருக்கும் ஒருவர் வீட்டில் உள்ள பொருட்களை போட்டு உடைத்ததை பற்றி கமல் நிச்சயம் எதிர்ப்பு தெரிவித்து இருப்பார். ஆனால் ரம்யா கிருஷ்ணன் அதைப் பற்றி ஒன்றுமே கூறாமல் சரியாக நடந்து கொண்ட சிபிஐ குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கமல்ஹாசன் சீக்கிரம் நிகழ்ச்சிக்கு திரும்பி வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News