தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர நடிகையாக கலக்கி வருபவர் ரம்யா கிருஷ்ணன். ஆரம்பகாலத்தில் பல படங்களில் நடிகையாக நடித்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் 8ம் வகுப்பு படிக்கும்போது வெள்ளை மனசு என்ற படத்தில் நடித்துள்ளார். அப்போது அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இல்லாததால் அதன் பிறகு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை.
பின்பு கவுண்டமணியுடன் ராஜா எங்க ராஜா என்ற படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறாமல் சினிமா மார்க்கெட்டை இழந்து பல வருடங்கள் தவித்து வந்தார். இந்த மாதிரி சினிமாவில் வெற்றி கிடைக்காமல் ஏற்றமும் இறக்கமும் சந்தித்து வந்துள்ளார்.

அதன்பிறகு 5 வருடம் கழித்து படையப்பா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வெளியாகி ரம்யா கிருஷ்ணனின் புகழை தமிழ்சினிமாவின் உச்சத்திற்கே கொண்டு போய் சேர்த்தது.
அப்போது சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்ததால் ரம்யாகிருஷ்ணன் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
தெலுங்கில் பாகுபலி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.