இந்திய திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சமூக ரீதியான செயல்களுக்கு முதலில் குரல் கொடுப்பவர் ஆவார். சமூக ரீதியான விஷயங்களில் அதிக ஈடுபாடும் அதற்கான உடனடி ஆதாரங்களையும் எழுப்புவார். இப்போதும் அதே போல் ஒரு ஆழமான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு இடையே நடைபெறும் போர் காரணமாக தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். அந்த செய்தி அனைத்து மக்களிடையேயும் பெரும் அச்சத்தையும் கவலையும் கொடுத்துள்ளது . 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்த பெண்களுக்கு எதிரான இருண்ட காலம் மீண்டும் திரும்பி விடுமோ என்ற பயமும் அனைவரின் மனதிலும் வந்து விட்டது.
இந்த கொடூர செயலை எண்ணி லட்சுமிராமகிருஷ்ணன் இணையதளத்தில் தனது ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார். தாலிபான்களின் பிடியில் இருக்கும் பெண்கள் குழந்தைகள் நிலையை நினைத்தால் மிகவும் கொடுமையாக இருக்கிறது.
மேலும் எப்படியாவது உயிர் தப்பி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்காவின் விமானத்தை நோக்கி ஓடிய மக்களை நினைத்தால் மனம் மிகவும் வருத்தமடைய செய்கிறது விமானத்தின் டயரை பிடித்து தொங்கிய 2 பேர் பரிதாபமாக பலியானது கொடுமையான விஷயம் இது உலக மக்களை பதற வைத்தது.
இதற்காக ஐநா ஏதேனும் முடிவு எடுக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். நினைத்தால் மன அழுத்தம் பயம் போன்றவை தொற்றிக்கொள்கிறது கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது என்று கூறியுள்ளார். பல பிரபலங்களும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர் .#afganistanwomen என்கிற #tag தேசிய அளவில் வைரலாகி வருகிறது.