புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரே படத்தில் விஜய் சேதுபதிக்கு ரசிகையாக மாறிவிட்டேன்.. ரகசியத்தை உடைத்த ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் நான்காம் சீசனில் மக்கள் அனைவரும் முதலில் ரம்யா பாண்டியன் தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் நாளுக்கு நாள் பிக்பாஸில் இவர் செய்த சேட்டைகள் மூலம் இவருக்கு விஷ பாட்டில் என பெயர் வைத்தனர்.

படங்களில் பிரபலமானதை விட ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் அதிக ரசிகர்களை ஈர்த்து வைத்தார். அதன்பிறகுதான் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி போய் வந்த பிறகு ரம்யா பாண்டியனுக்கு இருதரப்பு ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அதாவது எது செய்தாலும் கொண்டாடக்கூடிய ரசிகர்கள் ஒரு பக்கமும், ரம்யா பாண்டியன் செய்யும் தவறுகளை விமர்சனம் செய்யும் ரசிகர்கள் மற்றொரு பக்கமும் உருவாக்கியுள்ளனர்.

தற்போது ரம்யா பாண்டியன் விஜய் சேதுபதியுடன் பிடித்த தகவலை சமூக வலைதள பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். எனக்கு விஜய் சேதுபதி இடம் பிடித்ததே அவருடைய வசனத்தை கூறும் விதம் தான் என்றும், எல்லோரிடமும் இந்த மாதிரியான தனித்திறமை இருக்காது எனவும் கூறியுள்ளார்.

ramya pandian vijay sethupathi
ramya pandian vijay sethupathi

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி நடித்த படங்களில் எனக்கு பிடித்தது விக்ரம்வேதா திரைப்படம் தான். இந்த படத்தை இரண்டு முறை நான் தியேட்டரில் போய் பார்த்துள்ளேன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் மூலம் நான் அவருடைய ரசிகையாக மாறிவிட்டதாக பெருமிதத்துடன் கூறியுள்ளார். தற்போது இந்த தகவலை விஜய் சேதுபதி ரசிகர்கள் இணையதள பக்கத்தில் பெருமையாக கூறிவருகின்றனர்.

Trending News