புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிக்பாஸ் போனதுக்கு இதுதான் மிச்சம்.. செகனண்ட்டில் விலை உயர்ந்த கார் வாங்கிய ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி அதில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்காததால் விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

அந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் அவருக்கு கிடைத்த வரவேற்பு பிக்பாஸ் வாய்ப்பை அள்ளிக் கொடுத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்புவரை ரம்யா பாண்டியன் என்றால் ரசிகர்கள் மனதில் தேவதை என்ற பெயர் ஒட்டிக் கொண்டு இருந்தது.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் தான் ரம்யா பாண்டியனின் சுயரூபம் அனைவருக்கும் தெரியவந்தது. என்னதான் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் அழகி அது இது என முட்டுக் கொடுத்தலும் நாளுக்கு நாள் அவரது கேரக்டர் வெளியில் வரத் தொடங்கியது.

கடைசி கட்டத்தில் ரம்யா பாண்டியன் என்ற பெயரில் உள்ளே சென்று விஷ பாட்டில் என்ற பெயருடன் வெளியே வந்தார். ஆனால் என்னமோ இந்தியா பாகிஸ்தான் பார்டரில் சண்டை போட்டு இந்தியாவை மீட்டு வந்த கணக்காக அவர்களது வீட்டினர் கொண்டாடி தள்ளினர்.

அதன்பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. கைவசம் சூர்யா தயாரிப்பில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். அதில் கூட முக்கியத்துவம் வாணி போஜனுக்கு தான்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் சம்பாதித்த காசை வைத்து சமீபத்தில் செகனண்ட்டில் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி உள்ளாராம் ரம்யா பாண்டியன். இந்த புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ramya-pandian-bought-BMW-car
ramya-pandian-bought-BMW-car

Trending News