புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரம்யா பாண்டியன்.. இனியாது பட வாய்ப்பு கிடைக்குமா.?

தமிழ் சினிமா பொருத்தவரை பல நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது அப்படி வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன்.

இவர் ஜோக்கர் படத்தில் நடித்திருந்தாலும் பெரிய அளவு ரசிகர்கள் இவரை கொண்டாடவில்லை. அதனால் என்ன செய்வது என தெரியாமல் குக் வித் கோமாளி முதல் சீசனில் பங்கேற்றார். அதன்பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.

பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை கவரலாம் என நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போன ரம்யா பாண்டியனுக்கு கெட்ட பெயர் தான் கிடைத்தது.

ramya-pandiyan-cinemapettai-1
ramya-pandiyan-cinemapettai-1

அதாவது ஆரி விமர்சித்தும் பிக் பாஸ் போட்டியாளர்களை நேரடியாக விமர்சிக்காமல் சுற்றி வளைத்து விமர்சிப்பது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டதால் இவருக்கு விஷ பாட்டில், நரி, பாய்சன் மற்றும் தேள் என பலரும் கிண்டல் செய்தனர்.

தற்போது ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அவரது தங்கை திவ்யா பாண்டியன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் விரைவில் வீடு திரும்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending News