புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

காசுக்காக அம்மனை அசிங்க படுத்துறீங்களா? சர்ச்சையான போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான ஜோக்கர் திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தன. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகும் ஒரு சில நெகட்டிவான விமர்சனங்களும் கிடைத்தது. ரம்யா பாண்டியன் விஷ பாட்டில் எனவும் பலரும் அழைத்து வந்தனர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி ஓரளவு ரசிகர்கள் வரவேற்பு பெற்றது.

ரம்யா பாண்டியனுக்கு கதாநாயகியாக எந்த படமும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ஒரு சில படங்கள் வெளிவர உள்ளன.

ரம்யா பாண்டியன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது மட்டுமில்லாமல் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை திக்குமுக்காட செய்வார்.

ramya pandian
ramya pandian

தற்போது ரம்யா பாண்டியன் அம்மன் வேடத்தில் எடுத்த புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியன் அம்மன் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பதாக கூறி வருகின்றனர். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ramya pandian

ramya pandian
ramya pandian

நாம் தெய்வமாக கும்பிடும் அம்மனின் அலங்காரத்தில் ரம்யா பாண்டியன் எடுத்துள்ள போட்டோ ஷூட் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது எப்பொழுதும் கவர்ச்சி காட்டுவது போல இடுப்பு கவர்ச்சியில் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர் இது தெய்வத்தை அவமதிப்பது போல் இல்லையா என்பது போன்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Trending News