திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய் டிவியில் இந்த ஷோ போட்டா தெறிச்சி ஓடிருவேன்.. ரொம்ப பாதிக்கப்பட்ட ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவமுள்ள ஒரு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் ஒரு சில இயக்குனர்கள் தொடர்ந்து கதையை கூறி வருகின்றனர். ஆனால் கதையுடன் கதாபாத்திரமும் முக்கியம் என ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.

இவர் படங்களின் மூலம் பிரபலமானதை விட விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் பிரபலமடைந்தார். ரம்யா பாண்டியனுக்காகவே இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான அனைத்து நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்து தனது பிரபலத்தை அதிகப்படுத்தினார். இதற்கு பிறகுதான் இவருக்கு பிக்பாஸ் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் வெற்றி பெறுவார் என பலரும் கூறி வந்தனர். ஆனால் ஓரிரு நாட்களில் ரம்யா பாண்டியன் உண்மை முகம் வெளிவந்தது. அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் ரம்யா பாண்டியனுக்கு விஷ பாட்டில் என பெயர் வைத்தனர். இதன் மூலம் ஒரு சில ரசிகர்களிடம் வெறுப்பையும் சம்பாதித்தார்.

ரம்யா பாண்டியன்னிடம் சமீபத்தில் பேட்டியில் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது நீங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றீங்க ஆனால் உங்களுக்கு பிடித்தது எந்த நிகழ்ச்சி என கேட்கப்பட்டது.

ramya-pandiyan
ramya-pandiyan

அதற்கு ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நமக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்பதால்தான் அதில் கலந்து கொண்டேன். ஆனால் அதில் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதைவிட குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் எனக்கு பிடிக்கும் என கூறினார். அதற்கு காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஜாலியாக இருக்கும், ரசிகர்களிடமிருந்து வெறுப்பும் வராது என கூறினார்.

Trending News