செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

இணையத்தை குளிர்ச்சியாக்கிய ரம்யா பாண்டியன்!

2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பிறகு வெளியான ஜோக்கர் திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

ஆனாலும் முன்னணி நடிகையாக மாறுவதில் ஏதோ ஒரு தடங்கல் அவருக்கு ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. அதன்பிறகு சமுத்திரகனிக்கு ஜோடியாக ஆண்தேவதை படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக படுதோல்வியை சந்தித்தது.

ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றி இல்லாததால் பெரிய நடிகையாக சோபிக்க முடியாமல் போன ரம்யா பாண்டியன் விஜய் டிவிக்கு சென்ற பிறகு அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது என்று சொன்னால் மிகையாகாது.

விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோக்கள் அனைத்திலுமே பங்கேற்ற ரம்யா பாண்டியன் கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு நெகட்டிவ் கலந்த விமர்சனத்தை கொடுத்தாலும் சினிமாவில் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அந்த வகையில் சூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த படம் கூட விரைவில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து விட்டால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் தனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும் என பெரிதும் நம்புகிறாராம் ரம்யா பாண்டியன். அவரது எதிர்பார்ப்பு நிறைவேறட்டும்.

ramya-pandian-cinemapettai
ramya-pandian-cinemapettai

Trending News