செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரம்யா பாண்டியன் இடுப்பை காமிச்ச போட்டோலாம் வீண் போகல.. இனிமே அதுக்கு இவளோ துட்டு வேணுமாம்

ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய ஒரே ஒரு கவர்ச்சி போட்டோ மூலம் கட்டிப் போட்டவர் நடிகை ரம்யா பாண்டியன். அதைத் தொடர்ந்து சின்னத்திரையில் குக் வித் கோமாளி உட்பட பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.

இருந்தாலும் சினிமா வாய்ப்புகளை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர் பார்த்தவருக்கு இருந்த நல்ல பெயரையும் கெடுத்து கொண்டது தான் மிச்சம்.

இருப்பினும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். அதன் பலனாக தற்போது அவர் தமிழ் மற்றும் பிற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல நிறுவனம் ஒன்று ரம்யா பாண்டியனை சோசியல் மீடியாவில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் 10 லட்சம் கொடுத்தால் விளம்பரம் செய்ய தயார் என்று கூலாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் ஒரு விளம்பரத்துக்கு இவ்வளவு பணம் எல்லாம் ஓவர் என்று எந்த பதிலும் சொல்லாமல் எஸ்கேப் ஆகி விட்டார்களாம்.

ramya-pandian-cinemapettai
ramya-pandian-cinemapettai

மேலும் ரம்யா பாண்டியன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஒரு திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதால் தான் இவ்வளவு பந்தா காட்டுகிறார் என்றும் முன்னணி நடிகை ரேஞ்சுக்கு அவர் பில்டப் காட்டுவது அவருக்கே வினையாக முடியாமல் இருந்தால் சரிதான் என்றும் பலரும் கிசுகிசுக்கின்றனர்.

Trending News