பிக் பாஸ் நான்காவது சீசனின் டைட்டில் வின்னராக ஆரி அறிவிக்கப்பட்டார். வீட்டினுள் பல பஞ்சாயத்துகளை செய்து மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் ஆரி. நேர்மையாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதற்கு உதாரணம் என்றே கூறலாம்.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் முதல் ஐந்து போட்டியாளர்களில் பட்டியலில் இடம்பிடித்த ரம்யா பாண்டியனை ஆடம்பரமாக வரவேற்றனர். அந்த வீடியோ தற்போது சமுகவளைதலத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது கேரளா செண்டை மேளங்கள் முழங்க ஆரவாரத்துடன் ஆரத்தி எடுத்து ரம்யா பாண்டியன் வரவேற்றுள்ளனர். போரில் வென்ற வீராங்கனைக்கு கூட இவ்வளவு வரவேற்பு கிடைத்து இருக்காது.
ஆனால் ஒரே வீட்டுக்குள் 100 நாட்களுக்கு மேல் இருந்து உலக சாதனை படைத்த ரம்யா பாண்டியனுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு தேவையா.? என்று ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.
என்னதான் இருந்தாலும் கிட்டத்தட்ட 78,75,000/- மேல் வசூல் செய்துள்ளார் ரம்யா பாண்டியன். இதற்குப் பின்னர் விஜய் டிவியில் தொடர்வதற்கான வாய்ப்புகள் இல்லையாம். அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ரம்யா பாண்டியன் பட வாய்ப்புகள் இல்லாததால் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அந்த நிலை தொடராமல் இருக்க வேண்டுமென்றால் இயக்குனர்கள் கைவசம் தான் உள்ளது.
படவாய்ப்புகள் வருவதற்குள் தனக்குள் இருக்கும் உற்பத்தி குறைபாடு ( manufacturing defect ) சரி செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசை.