செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

தலைகீழாக யோகா செய்து அசத்தும் ரம்யா பாண்டியன்..

பொதுவாக நடிகைகள் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் தங்களுக்கென தனித் திறமைகளை வளர்த்து கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகை மஞ்சிமா மோகன் ஆன்லைன் மூலம் யோகா கற்றுக்கொண்டு அந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

அதேபோல் நடிகை நிவேதா பெத்துராஜ் நடிகர் அஜித் போல் ரேஸ் கார் ஓட்டி பயிற்சி பெற்று வருகிறார். தற்போது இந்த வரிசையில் நடிகை ரம்யா பாண்டியனும் இணைந்துள்ளார். தலைகீழாக நின்று யோகாசனம் செய்யும் வீடியோ ஒன்றை ரம்யா பாண்டியன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி விதவிதமான போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். ஆனால் தற்போது தலைகீழாக நின்று யோகாசனம் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

ரம்யா பாண்டியன் தமிழில் பெரும்பாலான படங்களில் நடிக்கவில்லை. ஜோக்கர், ஆண்தேவதை என இரண்டே படங்களில் மட்டும்தான் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி இவரது போட்டோக்காகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சற்று பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த சமயத்தில் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள ரம்யா பாண்டியனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Trending News