புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பட வாய்ப்பு இல்லனா என்ன, வேறு வழியில் லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் ரம்யா பாண்டியன்.. எல்லாம் பிக்பாஸ் மாயம்!

விஜய் டிவியால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரம்யா பாண்டியன் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் லட்ச லட்சமாக சம்பாதித்து வரும் செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு நடிகையாக வந்துவிட வேண்டுமென நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருபவர்தான் ரம்யா பாண்டியன். ஆனால் கிடைத்தது என்னமோ ஏமாற்றம் தான். ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்த சில படங்கள் ஓடவில்லை.

சோகமே சுமையாக சுற்றிக்கொண்டிருந்த ரம்யா பாண்டியனை குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவி அழைத்து பெரிய வாழ்க்கையை கொடுத்தது. அதனை தொடர்ந்து காமெடி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சீசன் 9க்கு ஜட்ஜாக வந்தார்.

இந்த இரண்டு நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கினார். ரம்யா பாண்டியன் தான் டைட்டில் வின்னர் என ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் கடைசியில் அவருக்கு கிடைத்தது என்னமோ விஷ பாட்டில் என்ற பட்டம் தான்.

ramyapandian-cinemapettai-01
ramyapandian-cinemapettai-01

இந்நிலையில் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லை என்றாலும் ரம்யா பாண்டியன் லட்சம் லட்சமாக சம்பாதித்து கொண்டிருக்கிறாராம். அதாவது ரம்யா பாண்டியனை பேட்டி எடுக்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டுமாம்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதாவது பொருளை விளம்பரம் வேண்டுமென்றாலும் லட்சக்கணக்கில் பில்லை போடுகிறாராம். இது கூட நல்ல ஐடியாவா இருக்கே என பல நடிகைகளும் தற்போது ரம்யா பாண்டியன் ஐடியாவை பின் தொடர ஆரம்பித்து விட்டனர்.

Trending News