வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

இத்தனை கோடியா? வேட்டையன் வில்லன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வேட்டையன் படம் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா சிங், ரக்‌ஷன், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே வேட்டையன் படத்தில் நடித்துள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. பொதுவாக ரஜினி படம் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும். அப்படி வேட்டையன் படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

முதல் நாளில் இப்படம் உலகளவில் 77.90 கோடி வசூலித்து இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.65 கோடி வசூலித்து இருந்த இப்படம். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 4.89 கோடியும், கர்நாடகாவில் 7.90 கோடியும், கேரளாவில் 4.72 கோடியும், இதர மாநிலங்களில் 2.34 கோடியும், வெளிநாடுகளில் 32.40 கோடியும் வசூலித்து ஒட்டுமொத்தமாக முதல் நாளில் 77.90 கோடி கலெக்‌ஷன் அள்ளி இருந்தது.

அடேங்கப்பா இத்தனை கோடியா..

இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் க்கு மாஸ் வில்லனாக நடித்த ராணா டகுபதி வாங்கிய சம்பளம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. படம் முழுக்க வேறு பரிணாமத்தில் பயணித்து கொண்டிருக்கும்போது, திடீரென தோன்றும் இந்த handsome ஹீரோ வில்லனாக மிரட்டி இருப்பார்.

இவரது உயரமும் பிரம்மாண்ட தோற்றமும், வில்லனுக்கான உடலமைப்பாக இருந்தாலும், சூப்பர்ஸ்டார் க்கு வில்லனாக ஏற்று கொள்ள முடியவில்லை. ஏன் என்றால், அவருடைய வயதிற்கு ஏற்றார் போல ஒரு வில்லன் வருவார் என்று எதிர்பார்த்திருப்போம். ஆனால் மலை போல இருக்கும் ராணா வந்துவிட்டார்.

இந்த நிலையில், இவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க, 5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இது குறைவான சம்பளமாகவே பார்க்க பட்டாலும், இவர் வரும் portions மிகவும் குறைவு. அப்படி இருக்க, இந்த சம்பளம் அதிகமென்றே பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News