ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

6 மாதம் கர்ப்பமாக இருக்கும் ரஜினியின் மகள்.. கோமாவில் இருந்து வந்த பயில்வான்

Actor Rajini: ரஜினியின் ஜெயிலரை பற்றி பரபரப்பாக செய்தி போய்க் கொண்டு இருக்கும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். ஏதாவது ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்திருப்பவர் தான் பயில்வான். இந்த சூழலில் ரஜினியின் மகளைப் பற்றி ஒரு விஷயம் கூறியிருக்கிறார்.

அதாவது ரஜினியின் மகள் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதால் விரைவில் அவர்களது வீட்டில் வளகாப்பு நடக்க உள்ளதாம். ஆகையால் மிக விரைவில் ரஜினியின் வீட்டில் குவா குவா என குழந்தை சத்தம் கேட்கும் என்று கூறியிருக்கிறார் பயில்வான். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் தனுஷை உடன் பிறந்து வாழ்ந்து வருகிறார்.

Also Read : 17 வயது நடிகையை நான்காவது திருமணம் செய்த ரஜினி பட நடிகர்.. அப்பாவை விட மூத்தவரை கல்யாணம் பண்ணிய நடிகை

ஆனால் விரைவில் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ உள்ளதாக அறிவிப்பு வெளியாகும் என்று பயில்வான் கூறியிருக்கிறார். இரண்டாவதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகனும் உள்ளார். சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பின்பு விசாகன் என்பவரை சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார். ரஜினியைப் போலவே விசாகனும் மிகப்பெரிய பணக்காரர் தான். இவருக்கும் நடிகராக வேண்டும் என்ற ஆசை வந்த நிலையில் ரஜினி மறுத்துவிட்டதாக பயில்வான் கூறியிருக்கிறார். ஆனால் இப்போது சௌந்தர்யா ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

Also Read : பீஸ்ட் படத்தில் செஞ்ச தவறை திருத்திய நெல்சன்.. விஜய் தடுத்ததை ரஜினி செய்யலை

அவருக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தலாம் என்று யோசித்த நிலையில் ரஜினி மறுத்து விட்டாராம். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது போல திருஷ்டியால் நமக்கு நிறைய சோதனை வந்துவிட்டது. ஆகையால் எளிமையாக வீட்டில் வளகாப்பு நடத்தலாம் என்று ரஜினி கூறிவிட்டதாக பயில்வான் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.

அதாவது சௌந்தர்யா மற்றும் விசாகன் தம்பதிக்கு கடந்த ஆண்டு வீர் என்ற ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இப்போதுதான் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற பயில்வான் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இதைக் கேட்ட ரசிகர்கள் கடந்த ஒரு வருடமாக பயில்வான் கோமாவில் இருந்திருப்பார் போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : ரஜினி படத்தால் தலையில் துண்டை போட்ட மார்க்கண்டேயன்.. ஒரே நாளில் ரிலீஸ் ஆனதால் பாடும் சோக கீதம்

Trending News