வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரஞ்சித்தான் கேப்டன், ஆனா எல்லாரும் என்னுடைய கண்ட்ரோல்.. ஒவ்வொரு வாரமும் அட்ராசிட்டி பண்ணும் போட்டியாளர்

Bigg Boss Tamil 8: கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் விஜய் சேதுபதி கோவா கேங்கையும், அருணையும் வச்சு செய்யும் அளவிற்கு நல்ல சம்பவம் செய்துவிட்டார். அதிலிருந்து உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்கள் அருணை டார்கெட் பண்ணும் அளவிற்கு கொந்தளித்து வருகிறார்கள். முக்கியமாக முத்துக்குமார் அவருடைய பொறுமையை இழந்து அருணை சீண்டிப் பார்க்கும் அளவிற்கு வார்த்தைகளால் தாக்கி பேசுகிறார்.

ஆனால் என்ன ஆனாலும் என்னை மாத்திக்க முடியாது, நான் யாரிடமும் அடங்கமாட்டேன் என்று அருண், முத்துக்குமாருக்கு டஃப் கொடுக்க ஆரம்பித்து விட்டார். அத்துடன் பத்தாவது வாரமான மேலாளர் மற்றும் தொழிலாளர்கள் என்ற டாஸ்கின் மூலம் முத்துக்குமாரனுக்கு அருணுக்கும் இடையே சண்டைகளும் பரபரப்பான கருத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

அதாவது பணியின் போது மேனேஜர் குழுவை சேர்ந்த முத்துக்குமரன், அருணை ட்விஸ்ட்டர் என்று அழைத்தார். இதனால் அங்கே ஒட்டுமொத்தமான சண்டைகளும் மோதலும் ஆரம்பித்துவிட்டது. இந்த டாஸ்க்காக இரண்டு குழுவாக செயல்பட்டு வருகிறார்கள். ஒன்று பணியாளர்கள் குழு என்கிற முறையில் ரஞ்சித், சத்யா, ரானவ், பவித்ரா,ராயன், அன்சிகா மற்றும் அருண் விளையாடி வருகிறார்கள்.

ஆனால் எல்லா விஷயத்துக்கும் குரல் கொடுக்கும் விதமாக அருண் அவருடைய உரிமை குரலை சொல்லும் விதமாக போர் கொடி தூக்கி வருகிறார். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாத முத்துகுமார் முட்டுக்கட்டை போட்டு அருனிடம் வாதாடி வருகிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு குழப்பத்திலேயே இருக்கிறார்கள்.

முக்கியமாக இந்த வாரத்தில் கேப்டனாக இருக்கும் ரஞ்சித் பேச்சுக்கு அங்கு இருக்கும் போட்டியாளர்கள் யாருமே மதிப்பு கொடுக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ரஞ்சித்தும் அவருடைய திறமையை காட்டும் விதமாக ஒவ்வொரு விஷயத்திலும் கருத்துக்களை சொல்ல முயற்சி எடுக்கிறார். ஆனால் அவரை டம்மியாக்கும் விதமாக நான் தான் இங்கே எல்லாம் பேசுவேன் இது என்னுடைய வீடு.

அனைவரும் என்னுடைய கண்ட்ரோலில் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு வாரமும் குரலை ஒசித்துக்கொண்டு விளையாடி வருவது முத்துக்குமார் தான். அந்த வகையில் இந்த வாரமும் முத்துக்குமார் அவருடைய பேச்சு திறமையாலேயே ஸ்கோர் பண்ண முயற்சி எடுத்து வருகிறார்.

இந்த டாஸ்க் இல் அருண் மேலே எந்த தப்பும் இல்லை என்பதற்கு ஏற்ப பார்ப்பதற்கு நன்றாக தெரிகிறது. ஆனாலும் அருணை விஜய் சேதுபதி கடந்த வாரம் வறுத்தெடுத்ததால் அவரைத் தொடர்ந்து அடிக்கும் விதமாக முத்துக்குமார் சம்பவம் செய்து வருகிறார்.

Trending News